Mr.360 என்பதை நிரூபித்த SKY – இஷ்டத்திற்கு விளாசிய இஷான் – பஞ்சாப் அணியை அவர்களது மைதானத்தில் வீழ்த்திய மும்பை.
ஐபிஎல் 2023 தொடரின் 46 வது போட்டி தற்போது நடந்து வருகிறது இப்போது பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். இந்த போட்டியானது பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி மு
ஐபிஎல் 2023 தொடரின் 46 வது போட்டி தற்போது நடந்து வருகிறது இப்போது பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். இந்த போட்டியானது பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் பதிவு செய்ய மும்பை அணி சிறப்பாக பந்துவீசி பிரப்சிம்ரன் விக்கெட்டை வீழ்த்தினார்.
இருந்தபோதிலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் மேத்யூஸ் பொறுமையாக ஆடி சிறப்பான தொடக்கத்தை பஞ்சாப் அணிக்கு கொடுத்தனர். 10 ஓவர்கள் முடியும் போது 78 ரங்களுக்கு இரண்டு விக்கெட் என்று இருந்த நிலையில் அதற்கு பிறகு ஆட்டம் சூடு பிடித்தது. லிவிங்ஸ்டன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 214 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார்.
இந்நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு களமிறங்கிய இஷாத் ஷர்மா சிறப்பாக விளையாடி வர கமரூன் கிரீன் 6வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போதுதான் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடிய சூரியகுமார் யாதவ் சிக்ஸர்களை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
அதோடு 13வது ஓவரின் போது சாம் கரண் போட்ட ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு 4 களை அடித்த போட்டியையே மாற்றினார். இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடி சூரியகுமார் யத்தவுடன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் SKY மற்றும் இஷான் கிஷான் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தார்கள். இருந்த போதிலும் மும்பை அணி வெற்றி பெற என்ன செய்யவேண்டுமோ அதனை செய்து விட்டு சென்றர்கள்.
இவர்களுக்கு பிறகு வந்த டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா கூட்டு சேர்ந்து வெற்றியை மும்பை அணிக்கு பெற்று தந்தனர். இந்நிலையில் 9 போட்டிகளை ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகளுடன் 7 வது இடத்திற்கு வந்துள்ளது. மேலும் இதிலிருந்துதான் ஐபிஎல் சுவாரசியம் தொடங்க இருக்கிறது. ஏனென்றால் புள்ளி பட்டியலில் இருக்கும் பல அணிகள் ஓன்று இரண்டு புள்ளி வித்தியாசத்தில் இருந்து வருகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் யார் பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறுவார்கள் என்று.