டி20 கிரிக்கெட் தற்போது மாறிவிட்டது – மும்பையின் வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா கொடுத்த பேட்டி.
ஐபிஎல் 2023தொடரின் 46வது லீக் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நேற்று மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. பதிலுக்கு 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை
ஐபிஎல் 2023தொடரின் 46வது லீக் ஆட்டம் மொஹாலி மைதானத்தில் நேற்று மிகவும் சிற்ப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. பதிலுக்கு 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித்தும், கிரீனும் நீண்ட நேரம் நீடிக்க முடியாததால் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.
ஆனால் கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்த இஷான் கிஷான் மற்றும் சூரிய குமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சூரிய குமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்களை விளாச இஷான் 41 பந்துகளில் 75 ரன்களின் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதன் முலம் மும்பை அணி 7 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி பெற்றது.
ரோஹித் ஷர்மா கூறியது :
இந்நிலையில் மும்பை அணியின் 5வது வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில் “டி20 கிரிக்கெட் ஆரம்பித்த போது 150 ரன்களை போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை வந்த பிறகு அவை முற்றிலுமாக மாறிவிட்டது. இந்த சீசனில் சராசரி ரன் மதிப்பே 180 ஆக இருக்கிறது. சூரியகுமார் யாதவ் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய சிறப்பே வித்தியாசமானது கிரிக்கெட் ஷாட்டுகளை அடிப்பதுதான்.
அதுவும் ஸ்டெம்பிற்க்கு பின்னால் அடிக்கும் ஷாட்டுகளை அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். இஷான் கிஷான் மற்றும் SKY இருவரும் இணைத்து பிரமாதமாக விளையாடுகிறார்கள். இந்த சீசனில் நாங்கள் மூன்று, நன்கு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேலே விட்டுக்கொடுத்தாலும் அதனை சேசிங் செய்து விளையாடி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியின் முடிவுகளை பற்றி நாங்கள் கவலை படவில்லை
, எங்களுடைய திறமையினை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
இஷான் கிஷான் மிகவும் வலிமையானவர். அவர் அந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட பயிற்சி செய்திருக்கிறார். நாங்கள் பந்துவீச்சில் இன்னமும் கவனம் செலுத்த வேண்டும், கடந்த மூன்று நங்கு போட்டிகளில் 200 ரன்களை எதிரணிக்கு கொடுத்துள்ளோம். போட்டியின் திவீரம் அதிகரித்து விட்டது. உங்களுடைய திட்டத்தை சரியாக செய்யவேண்டிய நேரம் இது என்றார் மும்பை இன்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா. .