IPL 2023 : இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட மும்மை இந்தியன்ஸ் | வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி.
இன்று முதல் போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. தொடக்கம் முதலே பெரிய ஷாட்டுகளை அடித்த ராஜஸ்தான் ராயலஸ் அணி 203 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 204ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எண்ணத்துடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் க
இன்று முதல் போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. தொடக்கம் முதலே பெரிய ஷாட்டுகளை அடித்த ராஜஸ்தான் ராயலஸ் அணி 203 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 204ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எண்ணத்துடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் காரணத்தால் அடித்து ஆடியது ஆனால் தொடர்ந்து வீரர்கள் ஆட்டமிழந்து தோல்வியடையும் தருவாயில் உள்ளது ஹைதராபாத் அணி.
இதனை தொடர்ந்து இன்னும் சில நிமிடங்களில் மற்றொரு போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. அந்த போட்டியானது பெங்களூரில் உள்ள எம் .சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் :
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணியாக மும்பை அணி தான் உள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.இந்த அணியை பார்த்தல் மற்ற அணிகளுக்கு சற்ற அச்சமாக இருக்கும். இப்படி பட்ட இந்த அணிக்கு இரண்டு வருடமாக சரியாக அமையவில்லை. இந்த அணியின் தூணாக இருந்த போலர்ட் இந்த வருடம் முதல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறினர்.
அதன் பின் மும்பை அணியின் முன்னனி வீரரான பூம்ரா மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மும்பை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
பெங்களூரு அணியில் என்ன தான் பெரிய வீரர்கள் இருத்தாலும் அவர்களுக்கு கோப்பை என்பது ஒரு எட்டக் கனியாக உள்ளது. இந்த அணிக்கு தற்போது டு பிளெசிஸ் கேப்டனாக இருக்கிறார் .இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி வீரராக இருக்கும் விராட் கோலி தான் கேப்டனாக இருந்தார். இருந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரதிக்கின்றனர் .
வெற்றி கணிப்பு :
என்னதான் கடப்பறை அணி என்று அழைத்து வந்தாலும் அந்த அணியின் முக்கிய வீரர்கள் விலகியதும் அவர்ளுக்கான மாற்று வீரர்களை இன்னமும் அறிவிக்காமல் இருப்பது மும்பை அணிக்கு பெரிய பின்னடைவாகவே இருந்தாலும், அனுபவ ரீதியிலும் முதல் போட்டியை வெற்றியடைந்த ஆக வேண்டும் என்ற முனைப்பினாலும் பெங்களூரு அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் மும்பை அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமா உள்ளதாக கூறப்படுகிறது.