மால டும் டும், நாட்டு நாட்டு பாடலுடன் கோலாகலமாக தொடங்கிய IPL 2023 | வைரலாகும் வீடியோ.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருக

By ·

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி சரியாக இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாக பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான ஸ்டார்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிச்சியடையுய செய்தனர். தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியான தமன்னா பாட்டியாவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். அதே போல நேஷனல் க்ரிஷ் என்று அழைக்கப்படும் தென்னகத்தின் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ராஷ்மிகா மந்தனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவருமே இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகைகளாகவும் பல பாண் இந்தியா படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. அதோடு பாலிவுட்டின் பிரபல பாடகர் அரிஜித் சிங் தனது குரல் மந்திரத்தை பரப்பி மைதானத்தில் இருந்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் அரிஜித் சிங் இந்தியாவின் மிகவும் பிரபலமான பாடகர். இவருடைய எந்த பாடல்கள் வெளியானாலும் அவருடைய எந்தப் பாடல்கள் வெளியானாலும் அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்து விடும். அப்படிப்பட்ட ஒருவர் மைதானத்தில் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரிய பரிசு பொருளை கொடுத்து போன்றது. அது போதாதென்று அர்ஜித் சிங்கின் நேரலை நிகழ்ச்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளின் சுவாரஸ்யம் இரண்டையும் ஒரே இடத்தில் காணும் வாய்ப்பையும் பெற்றனர் ரசிகர்கள்.

இவரை தவிர்த்து நடிகை தமன்னா பற்றி சொல்ல தேவையில்லை, இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழசினிமாவிலும் பல படங்களை நடித்திருக்கிறார். ஆனால் தற்போது ஹிந்தி மலையாளம் போன்ற சினிமாக்களில் நடித்து வருகிறார். அதோடு புஷ்பா பட நாயகி தற்போது புஷபா 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் மிகப்பெரியது. இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் ஐபிஎல் 16 தொடக்கத்தில் நடனமாடியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை