வெளியானது ஐபிஎல் 2023 பிளேஆஃப் தேதிகள் – சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.
ஐபிஎல் 2023 இன் 29வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை ஐபிஎல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் பிளேஆஃப்கள் குறித்த தகவலை பிசிச
ஐபிஎல் 2023 இன் 29வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை ஐபிஎல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் பிளேஆஃப்கள் குறித்த தகவலை பிசிசிஐ தெரிவித்து அதனுடன் இந்த போட்டிகள் அனைத்தும் எப்போது, எங்கே நடைபெறும் என்றும் அதில் கூறியுள்ளது.
சென்னை ரசிகர்களை பொறுத்தவரையில் இந்த சீசன் கண்டிப்பாக ஒரு அதிர்ச்சி கொடுக்கும் சீசனாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருதஹி கிடையாது. என்னேற்றால் ஒரு புறம் கப் என்றாலும் மறுபுறம் தோனியின் கடைசி ஐபிஎல் இதுதான் என்று பல தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2023 பிளேஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் 2023 மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. தகுதிச் சுற்று 1 மே 23 ஆம் தேதி எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்திலும் அதனை தொடர்ந்து மே 24 ஆம் தேதி எலிமினேட்டரும் நடைபெறுகிறது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குவாலிபையர் 2 மற்றும் டாடா ஐபிஎல் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
எம்எஸ் தோனி தனது கடைசி ஐபிஎல்லில் விளையாடுவதாகக் சொல்லப்படுவதை உறுதிப்படுத்தும் தகுதிச் சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளை சென்னையில் வைத்துள்ளது பிசிசிஐ. ஏனெற்றால் தோனி தன்னுடைய கடைசி போட்டியை சென்னை மைதானத்தில் விளையாட விரும்புவதாக கூறியிருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அவருக்கு பிரியாவிடை கொடுக்க பிசிசிஐயும் யோசித்து வருகிறது சொல்லப்படுகிறது.
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
BCCI Announces Schedule and Venue Details For #TATAIPL 2023 Playoffs And Final.
Details 🔽https://t.co/JBLIwpUZyf
சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், மஹியிடம் ரசிகர்கள் கண்ணீர் மல்க விடைபெற வாய்ப்பு இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் சென்னை தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்று ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தினால், புள்ளிப் பட்டியலில் இந்த அணி முதலிடத்துக்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
ஐபிஎல் 2023 பிளே-ஆஃப் அட்டவணை:
மே 23 – தகுதிச் சுற்று 1 சென்னை
மே 24 – எலிமினேட்டர் சென்னை
மே 26 – தகுதிச் சுற்று 2 அகமதாபாத்
மே 28 – இறுதி அகமதாபாத்