ஆர்சிபியின் பௌலர்களை பந்தாடிய ஃபில் சால்ட் – அதிக ஸ்கோரை அசால்டாக துரத்தி அதிரடி வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ்.

ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன. பெங்களூரு அணி லக்னோ அணிக்கு எதிரா

By ·

ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன. பெங்களூரு அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது, இருப்பினும் இப்போட்டியை வென்றால் தான் புள்ளி பட்டியலில் முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே கொடுத்தனர். 7 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. அதன் பின்பு தான் பெங்களூரு அணிக்கு சோதனையாக கேப்டன் டுப்ளசிஸ் 45 ரன்களில் வெளியேற, அதன் பின்னரே மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

அணிக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் விளையாடி வந்த விராட் கோலி தன்னுடயை அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
முகேஷ் குமார் வீசிய பந்தில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு பக்கம் அற்புதமாக விளையாடிய லோம்ரோர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வர அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்தி வர 11 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது.

இந்நிலையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடஸ் அணி தொடக்கமே மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் சால்ட் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்நிலையில் 4 ஓவர்கள் சிக்ஸர்களும் 4கலுமாக 41 ரன்களை எடுத்திருந்தது டெல்லி கேபிடல்ஸ். இந்நிலையில் 5வது ஓவரை சிராஜ் போட வந்தார். அப்போது முதல் இரண்டு பந்துகளில் 2சிக்ஸர்களை விளாசினார் சால்ட்.

இதற்கடுத்த வார்னர் அவுட்டான நிலையில் மார்ஸ் களமிறங்கிய 6சர்களை விளாசினார் பவர்பிளேயில் டெல்லி 70 ரன்கள் எடுத்தது. அதனை டெல்லி வேகமாக ரன் குவித்தது. பிலிப் சால்ட் 28 பந்துகளில் அரைசதம் அடிக்க ஹர்ஷல் படேல் ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து சால்ட் அண்ட் ருஸ்ஸோ ஆர்சிபியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து கொண்டிருந்தனர். இறுதியில் டெல்லி அணி டெல்லி அணி 16, 4 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.டெல்லி அணியின் இன்னிங்ஸில் 15 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்தது. இந்நிலையில் ஆர்சிபியை வென்ற டெல்லி பல நாட்கள் கழித்து புள்ளி பட்டியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை