முக்கியமான நேரத்தில் கோலி அடித்த சதம் – பிளே ஆஃப் ரேஸில் அதிரடியாக நுழைந்த ஆர்சிபி.

ஐபிஎல் 2023 தொடரின் 65 போட்டியானது தற்போது ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போன

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 65 போட்டியானது தற்போது ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத்திற்கு சரியான தொடக்கம் இல்லை. சொல்லப்போனால் முதல் மூன்று ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத்.

ஆனால் அதற்கு பிறகு அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 15(12) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தார் சிக்ஸர்களும் போர்களுமாக இவர் அடிக்க ஹைதராபத்திற்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் மறுபுறம் பொறுமையாக ஆடிய ஹைதராபாத் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 18(20) ரன்களில் ஆட்டமிழக்க கிளாசன் மட்டும் சிறப்ப ஆடி 24 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் பொறுமையாக ஆட கிளசன் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஹைதரபாத் 150 தண்டுவார்களா என்றிருந்த நிலையில் அதிரடியாக ஆடிய கிளாசனின் பேட்டிங்கினால் 150 ரன்களை தொட்டது ஹைதராபாத். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாசன் 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களின் முலம் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் கிளாசன்.

ஆனால் சதம் அடித்த அந்த ஓவரிலேயே கிளாசன் 51 பந்துகளை 104 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் அணிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து விட்டார். இந்நிலையில் அவர் சதம் அடித்த வீடியோ தான் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆர்சிபி பேட்டிங் :

இறுதியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது ஹைதராபாத் அணி. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆர்சிபியின் தொடக்க ஜோடியான விராட் கோலி மற்றும் டு பிளேசிஸ் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் ஃபாஃப் டு பிளிசிஸ் 71 ரன்கள் எடுத்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் செய்தார்.

அதே சமயம் விராட் கோலி மீண்டும் தனது ‘விராட்’ பேட்டிங்கால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கோலியின் அபாரமான பேட்டிங்கினால் 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது வாழ்க்கையில் 76வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இறுதியில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் விதியசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலிலும் மும்பையை கீழே தள்ளி 4வது இடத்திற்கு வந்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை