விராட் கோலியை மீண்டும் சீண்டிய ரியான் பராக், வீடியோ உள்ளே
ஐபிஎல் 2023 இன் எட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்ச
ஐபிஎல் 2023 இன் எட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. வெற்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை ஏனெற்றால் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர் பஞ்சாப்.
பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதன் போது, அவர் 3 சிக்ஸர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். கேப்டன் ஷிகர் தவான் 56 பந்துகளில் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இருந்த போதிலும் விக்கெட் இழக்காமல் பஞ்சாப் அணியால் தொடர்ந்து ஆடமுடியவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்கள்.
அதன் போது ஜேசன் பட்ளரிடம் கேட்ச் அவுட் ஆனர் பிரப்சிம்ரன் சிங். ஆனாலும் அவர் அடித்த சிக்ஸர்கள் மற்றும் போர்ஸ் அடித்து பந்துவீச்சளர்களை மிரள வைத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் விராட்கோலியை போல பாவனை செய்துள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது கே.எம்.ஆசிப் அவருக்கு பந்துவீசிக்கொண்டிருந்தார். அப்போது பந்த பந்தை மிட் ஆஃப் திசையில் கேக்கமாக அடித்தார் ஷிகர். ஆனால் அந்த பந்தை லாவகமாக பிடித்தார் ரியான் பராக். 4 ரன்களை தடுத்தது மட்டுமல்லாமல் விராட் கோலி இரண்டாவது ரன் எடுக்க சொல்வதனை போல செய்கையில் காட்டினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
— Manikandan619 (@NinjaATG) April 6, 2023
அதாவது கே.எம்.ஆசிப் வீசிய பந்த அடுத்த தவான் இரண்டாவது ரன் ஓட விரும்பினார். அப்போது விராட் கோலி போலவே சைகைகளில் இரண்டாவது ரன் எடுக்கச் சொன்னார். சொல்லப்போனால் விராட் கோலியும் இப்படித்தான் செய்வார். இதனாலே இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் ராஜஸ்தான் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு ஈடுகொடுகக முடியாமல் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது.