ஏழைகளுக்கு ரூ5 லட்சம் வாங்கி கொடுத்த ரிதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் வீடியோ

ஐபிஎல் 2023-ல், ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த போட்டிகள் நடக்கின்றன. இதனால் பார்வையாளர்கள் பொழுதுபோக்கிற்கு உள்ளேயே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்றும் ஏப்ரல் 3ஆம் தேதி பரபரப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த லக

By ·

ஐபிஎல் 2023-ல், ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த போட்டிகள் நடக்கின்றன. இதனால் பார்வையாளர்கள் பொழுதுபோக்கிற்கு உள்ளேயே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்றும் ஏப்ரல் 3ஆம் தேதி பரபரப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்நிலையில் தொடக்கத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது சரியான செயலாக இருக்கவில்லை. ஏனெற்றால் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களமிறங்கி லக்னோ பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த காட்சி ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இப்படி இவர்கள் இருவரும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியை கதிகலங்க வைத்திருக்கும் போது கெய்க்வாட் ஒரு பெரிய ஷாட் ஒன்றை அடித்தார். அந்த ஷாட் கர்நாடகாவில் அமர்ந்திருக்கும் காபி வியாபாரிகளுக்கு 5 லட்சம் ருபாய் கிடைக்கும் வகையில் இரு செயலை செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது ஐபிஎல் 2023 சீசனுக்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் பார்ட்னராக இருந்து வருவது டாடா நிறுவனம். இந்த டாடா நிறுவனத்தின் Tiago EV கார் ஒவ்வொரு போட்டியிலும் அரங்கத்தில் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டுள்ள இந்த காரை பேட்ஸ்மேன்கள் யாரது அடித்தால், கர்நாடகாவின் காபி செடிகளுக்கு டாடா குழுமம் சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இப்படிப்பட்ட நிலயில் தான் கெய்க்வாட் இன்று அடித்த ஒரு சிக்ஸர் அந்த காரை தாக்கியது.

அந்த Tiago EV காரில் சேதம் ஏற்படும் அளவிற்கு அந்த பந்தின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் கார் தாக்கப்பட்டதினால் கர்நாடகாவின் காபி செடிகளுக்கு டாடா குழுமம் சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவை ஓரு பக்கம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பிரமாதமாக ஆடி 6 மழையை பொழிந்தனர். அதோடு கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள் அடித்து 217 என்ற இமய ஸ்கொரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை