இந்த சீசனில் 3வது சதம், மும்பைக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய சுப்மன் கில் – 233 ரன்கள் இலக்கு.

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஞாயிறு அன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியானத

By ·

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஞாயிறு அன்று பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இப்போட்டியானது மழையின் காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பெளலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். 3 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை மட்டுமே அடித்தனர். அதன் பின்னர் அதிரடியை காட்ட நினைத்த சாஹா 18 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த கில் 32 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

மும்பை அணியின் பௌலர்களை அடித்து விளாசி வந்தனர். 10 ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை குவித்தனர். கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் சில பவுண்டரிகளை பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 49 பந்துகளிலே தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். மும்பை அணியின் பௌலர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்தனர்.

16ஓவர்கள் முடிந்த நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை குவித்து வந்தனர். 129 ரன்கள் இருந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார் கில் 43 ரன்கள் ரன்களில் சாய் சுதர்ஷன் ரிடயர்ட் அவுட்டாகி வெளியேற, 20 வது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தனர். இந்த ரன்களுக்கு முக்கியமான காரணம் சுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் இவ்வளவு ரன்களை அடித்தினால் மும்பை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். மும்பை அணியிடம் சூரியகுமார் யாதவ், டிம் டேவிட் போன்ற பல வீரர்கள் இருந்தாலும் இந்த மைதானத்தில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை மும்பை முதல் 10 ஓவரிகளில் 100 ரன்களுக்கு மேலே அடித்தால் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்பு அதிகம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை