இதனால் தான் எம்.எஸ்.தோனி சிறந்த வீரர், தோனியை புகழ்ந்து தள்ளிய அதிரடி நாயகன் வீரேந்திர சேவாக்.

எம்.எஸ் தோனியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஒரு சிறந்த வீரர். இதனை மற்ற அணி வீரர்கள் கூட பலமுறை கூறியிருக்கின்றனர். அதோடு தோனி இந்தியாவிற்க்காக பல போட்டிகளில் ஆடி வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். அதோடு இவரது தலைமயில் இந்திய அணி கடந்த

By ·

எம்.எஸ் தோனியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஒரு சிறந்த வீரர். இதனை மற்ற அணி வீரர்கள் கூட பலமுறை கூறியிருக்கின்றனர். அதோடு தோனி இந்தியாவிற்க்காக பல போட்டிகளில் ஆடி வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார். அதோடு இவரது தலைமயில் இந்திய அணி கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றது. அது மிகவும் பெருமையான ஒரு விஷியம் அதனை தவிர்த்து டி20 உலகக்கோப்பையிலும் கேப்டனாக இருந்து வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கான கேப்டனாக களம் இறங்கினர். பின்னர் அன்றிலிருந்து இன்று வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே கேப்டானாக இருந்து வருகிறார் எம்.எஸ்.தோனி. தோனி சமீபத்தில் தான் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களை கலக்கமடைய செய்தது. இதனால ஐபிஎல் தொடரில் இருந்தும் தோனி விலகி விடுவாரோ என்ற அச்சம் சென்னை ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அங்காங்கே தோனிக்கு தற்போது நடந்துவரும் ஐபிஎல் சீசன் தான் கடைசி போட்டி என்று தகவல்கள் கிடைத்தாலும், அதனை தோனியோ அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமோ உறுதிப்படுத்த வில்லை. இருந்த போதிலும் இந்த சீசனுடன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. சொல்லப்போனால் இந்த ஐபிஎல் சீசன் உலகில் உள்ள அணைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு மறக்க முடியாத தொடராக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

என்றாலே இந்த சீசன் சென்னை கப் அடித்தால் அதனுடன் தோனியின் ஐபிஎல் சகாப்தம் முடிவடையும் என்று பல ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கூறுகின்றனர். இருந்த போதிலும் ரோஹித் சர்மா போன்ற பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தோனி விடை பெறுவது அவருக்கு மட்டுமே தெரியும், அவர் இந்திய அணியில் இருந்து விடைபெறுவது கூட யாரிடமும் சொல்லாமல் திடீரென விலகினார். ஆனால் தோனி ஐபிஎல் தொடரில் இனனும் 2, 3 வருடங்களுக்கு விளையாடும் திறமை அவரிடம் உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் இந்திய கிரிட்கெட் அணியின் சிக்ஸர் நாயகன் / வீரேந்திர சேவாக் தோனியை பற்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் “எம்.எஸ்.தோனி ஒரு சிறந்த வீரர், அவர் மிடில் ஆர்டர் அல்லது லோயர் ஆர்டரில் வந்தாலும் கூட 5,000 ரன்களை எடுத்துள்ளார். இதை எந்த வீரரும் சாதிக்க முடியாது. அதோடு அதனை அவர் தொடர்ந்து செய்துள்ளார். அதன் மூலம் பல போட்டிகளில் அவர் விளையாடும் அணிக்காக வெற்றியும் பெற்று தந்திருக்கிறார் என்று கூறினார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை