நாட்டிற்காக விளையாட கிளப் அணியிடம் அனுமதி பெற வேண்டிய நேரம் வரும் – IPl போட்டியை சாடிய பாட் கம்மின்ஸ்.

ஐபிஎல் 2023 தொடரானது சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியான வரும் ஜூன் 7 முதல் 11 வரையில் இந்த போட்டியானது ஓவல் மைத்தனத்தில் நடைபெறுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகள

By ·

ஐபிஎல் 2023 தொடரானது சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியான வரும் ஜூன் 7 முதல் 11 வரையில் இந்த போட்டியானது ஓவல் மைத்தனத்தில் நடைபெறுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ள குறைவான நேரமே கிடைத்தால் முக்கிய வீரர்கள் பல கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது ஐபிஎல் போட்டிகள் தான். ஏனென்றால் ஐபிஎல் இறுதி போட்டி மே 28ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதனால் அந்த போட்டிகளை முடித்து விட்டு உலககோப்பைக்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் தற்போது 15 ஆண்டுகள் கடந்த மிக பிரமாண்டமாக சர்வதேச போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டுவரையில் 8 அணிகள் விளையாடிவந்த நிலையில் தற்போது 10 அணிகள் விளையாடுகின்றனர். இது வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்புகிறது. இதனால் போட்டிகளும் அதிகரிக்கும். அப்படி போட்டிகள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் வீரர்கள் கலந்து கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் ஆஸ்திரேலிய கேப்டன்பாட் கம்மின்ஸ் வெளிப்படையாக விமர்சித்து பேசியுள்ளார்.

பாட் கம்மின்ஸ் கூறியது :

இது குறித்து சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் “இது பல காலமாக நடந்து வந்தது, தற்போது இது நெருங்கி விட்டது. அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்பை போல வீரர்களுக்கு அவர்களுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக நேரம் சரியாக கிடைக்கவில்லை. அதனை ஐபிஎல் போட்டிகள் பல வருடங்களுக்கு முன்னரே மாற்றி விடாது. அது மேலும் மேலும் வீரர்களிடையே ஊடுருவி வருகிறது. எனவே நாங்கள் முனைப்புடன் இருக்க விரும்புவதால் ஆஸ்திரேலியாவிற்கு விளையாடுவதை கவனமாக வைத்திருக்க விரும்புகிறோம்.

ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவதை நாங்கள் சிறப்பானதாக ஆக்க முயற்சி செய்து வருகிறோம். அது எங்களுடைய கையில் தான் இருக்கிறது. அதனை பற்றி நாங்களும் உன்னிப்பாக யோசித்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் வரும் அடுத்த சில வருடங்களில் 12 மத சர்வதேச கிரிக்கெட்டின் காலண்டர் என்பது மாறியிருக்கும். டி20 அணிகள் வீரர்களுக்கும் வழங்கும் வாய்ப்புகள் அதிகமாக பேசப்படும். அதற்காக நான் வீரர்களை குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

ஓரு நாள் டி20 அணிகள் வீரர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வரும் என்று நினைக்கிறன். கால்பந்து விளையாட்டில் நாட்டிற்காக விளையாடுவதற்கு அந்த கிளப்பின் அனுமதி வேண்டும். அந்த நாள் கூடிய விரைவில் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே நாட்டிற்காக விளையாடுவதை ஸ்பெஷலாக வைக்க விரும்புகிறோம். குறிப்பாக சிறந்த வீரர்கள் உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வெற்றி பெற்று தவிர விரும்புகிறோம் என்றார் பாட் கம்மின்ஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை