ஐபிஎல் எல்-கிளாசிகோ – இன்று நடக்கும் போட்டியில் வரலாற்றை மாற்றுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்த

By ·

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் போட்டியின் எல்-கிளாசிகோ :

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இரு அணிகளுக்குமான போட்டி எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படுவதற்கு காரணம் ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான கடுமையான மோதலை இது குறிக்கும்.

என்னதான் இரண்டு போட்டிகளும் இந்தியாவில், வீரர்களுக்கு இடையே நடந்தாலும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டி ஐபிஎல் தொடங்கியது முதலே இருந்து வருகிறது.குய்ப்பிடத்தக்கவகையில் சொல்ல வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் மொத்தம் சென்னை மற்றும் மும்பை 36 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளுமே மிகவும் மோசமாக ஆடியது.

சொல்லபோனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் பரிதாபப 10வது இடத்திலும் இருந்தது. அது சென்னை ரசிகர்களுக்கும் சரி, மும்பை ரசிகர்களுக்கும் சரி கஷ்டகாலம் தான். இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் குஜராத் சென்னை அணியுடன் மோதி சென்னை தோல்வியடைந்தது. ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இவை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மும்பை தன்னுடைய முதல் போட்டியிலேயே ஆர்சிபிக்கு எதிராக விளையாடி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை தன்னுடைய வெற்றிக்கணக்கை நீடிக்கவும், மும்பை தன்னுடைய வெற்றி கணக்கை இந்த போட்டி மூலம் தொடரவும் கடுமையாக முயற்சி செய்யும். மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கான வெற்றி கணக்கை பார்த்தோம் என்றால்.

புள்ளிவிவரம் :

இது வரையில் சென்னை மற்றும் மும்பை 34 போட்டிகளில் விளையாடி இருக்கிறது அதில் மும்பை 20 போட்டிகளிலும், சென்னை 14 போட்டிகளிலும் வெற்றியடைந்திருக்கிறது . மேலும் மும்பை அதிகபட்சமான 219 ரன்களும், சென்னை அதிகபட்சமான 218 ரன்களும் எடுத்துள்ளது. அதே போல குறைந்த பட்சமாக மும்பை 136ரன்களும் சென்னை 79ரன்களும் எடுத்துள்ளது. இந்த போட்டிகளில் சென்னை அணி சார்பாக சுரேஷ் ரைனா 710 ரன்களும், டுவைன் பிராவோ 35 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை