சஞ்சு சாம்சனை வேறு பெரிய அணியில் சேருமாறு கூறினேன். ஆனால் அவருடைய பதில் அற்புதமாக இருந்தது – ராஜஸ்தான் பயிற்சியாளர்.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைந்த அளவே வழங்கப்பட்டாலும் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்திய அணியில் சாம்சன் இடம்பெறும் போதெல்லாம் அ

By ·

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைந்த அளவே வழங்கப்பட்டாலும் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்திய அணியில் சாம்சன் இடம்பெறும் போதெல்லாம் அவருக்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தும் சாம்சன், ஐபிஎல் 2022 சீசனின் இறுதிப் போட்டிக்கு தனது அணியை அழைத்துச் சென்றார்.

கடந்த 2018ல் ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ராயல்ஸ் அணியில் இணைந்த சாம்சன் அந்த அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராஜமணி பிரபுவின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் சாம்சனுக்கு வேறு அணியில் சேர வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பயிற்சியாளர் ராஜாமணி பிரபு கூறுகையில் “கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் சில பெரிய அணிகளில் சேருமாறு சஞ்சு சாம்சனிடம் கூறினேன், ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸை பெரிய அணியாக மாற்ற விரும்புகிறேன் என்று பதிலளித்த அவர், அஷ்வின், சாஹல், பிரசித் போன்ற பெரிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருவோம் என்று கூறினார்.

மேலும் மூன்று ஐபிஎல் உரிமையாளர்களிடமிருந்து சாம்சனுக்கு கேப்டன் பதவி வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் அவர் அவற்றை நிராகரித்ததாகவும் ராஜாமணி தெரிவித்தார். 2022 ஏலத்திற்கு முன், சஞ்சு சாம்சனுக்கு மூன்று பெரிய ஐபிஎல் உரிமையாளர்களிடமிருந்து கேப்டன் பதவி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தனது அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தின் காரணமாக அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

சொல்லப்போனால் 99% வீரர்கள் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கண்டிப்பாக அந்த அணிக்கு அப்படியே சென்றிருப்பார்கள். ஆனால் சான்சு சாம்சன் அப்படி செய்யவில்லை என்றும் கூறினார். மேலும் பயிற்சியாளரின் கூற்றுப்படி சஞ்சு சாம்சன் ஒரு சீசனுக்கு சுமார் 15 கோடி பெறுகிறார், எனக்குத் தெரிந்தவரை, அவர் குறைந்தபட்சம் ரூ.2 கோடியை உள்நாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த திறமை கொண்ட வீரர்களுக்கும் உதவ கொடுக்கிறார்.

சஞ்சு சாம்சன் நல்ல கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், நல்ல மனிதராக சஞ்சு வெற்றிபெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதனால்தான் அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராஜமணி பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை