சென்னை அணியின் பிராவோ இடத்தை பூர்த்தி செய்ய மற்றுமொரு வீரர் வந்துவிட்டார் – இர்பான் பதான்.

ஐபிஎல் 2023 -இல் நிறைய இளைஞர்கள் தனது திறமையையே வெளிப்படுத்தி வருகிறன்றனர், அதில் பதிரணவும் ஒருவர். இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மாதீஷா பத்திரண அவர் உண்மையான வேகத்தைக் கொண்டிருப்பதாகவும், நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர மேற்கிந்தியத்

By ·

ஐபிஎல் 2023 -இல் நிறைய இளைஞர்கள் தனது திறமையையே வெளிப்படுத்தி வருகிறன்றனர், அதில் பதிரணவும் ஒருவர். இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மாதீஷா பத்திரண அவர் உண்மையான வேகத்தைக் கொண்டிருப்பதாகவும், நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவுக்கு பதிலாக அவர் இருப்பதாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இரவு, சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தைத் காட்டியது.சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மீண்டும் தனது அணியை சிறப்பாக வழிநடத்தினார். தோனி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில்  9 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு வழிநடத்தினார்.

ஸ்கோரை தற்காத்துக் கொண்ட சிஎஸ்கேவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதிரனா தனது அற்புதமான ஆட்டத்தால் (3/37) தனது அற்பணிப்பை  தொடர்ந்து உயர்த்தினார். அவரும் மற்ற சிஎஸ்கே பந்துவீச்சாளர்களும் சேர்ந்து டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களை 140/8 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.ஒவ்வொரு அணியும் டெத் ஓவர்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு பந்து வீச்சாளரை தேடுகின்றன. மும்பை அணியில் மலிங்கா,

பும்ரா ஆகியோர் இருந்தனர். கொல்கத்தா அணியில் இரண்டு ஐபிஎல் சீசன்களில் சுனில் நரைனை வைத்து கோப்பையை வென்றது. சிஎஸ்கே அணியில் பிராவோ இருந்தார், இப்போது பதிரனா இருக்கிறார். அவர் ஒரு சரியான மாற்று வீரர், மேலும் அவர் உண்மையான வேகத்தைக் கொண்டுள்ளார்” என்று இர்பான் பதான் கூறினார்.பதான் கூறுகையில், ஐபிஎல்லில் ஒரு அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் ஒரே அணி சேப்பாக்கம் மட்டுமே என்றும்,

ஏனெனில் அவர்கள் ஆடுகளத்தில் எம்.எஸ்.தோனியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். 4 முறை சாம்பியனான சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலின் முதல் எண்ணிக்கை 17 ஆக உயரும்.இன்று நடக்கவிருக்கும் போட்டியில் வென்றால் முதல் அணியாக ப்ளே ஆப்பிற்கு சென்னை அணி தகுதி பெரும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை