மும்பையின் வெற்றியை தட்டி பறித்த அர்ஷ்தீப் சிங், 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி.

ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள்

By ·

ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள் ஷார்ட் மற்றும் ப்ரப்சிம்ரன் பேட்டிங்கில் களமிறங்கினர்கள். பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை எளிதாகவே சமாளித்து வந்தனர். இருப்பினும் ஷார்ட் 11 ரன்களிலே  அவுட்டாகி வெளியேறினார்.

6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்களை எடுத்திருந்தனர். இந்நிலையில் பந்து வீச வந்தார் அர்ஜூன் டெண்டுல்கர், ப்ரப்சிம்ரனின் 26 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை எடுத்து ஐபிஎல்லில் இரண்டாவது விக்கெட்டை பதிவு செய்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய தாய்டே அணிக்கு ரன்களை சேர்த்தார் .16 வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். பஞ்சாப் இதை பயன்படுத்தி கொண்டு ரன்களை குவிக்க ஆரம்பித்தது.

பாட்டிய 28 பந்துகளில் 41 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். ஆர்ச்சர் ஓவர்ளில் அடித்து விளையாடிய கேப்டன் சாம் கரண் 25 பந்துகளிலே அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதே ஓவரில் சாம் கரண் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த அனைத்து பேட்ஸ்மேன்கள் அனைவரும் அற்புதமாக விளையாடினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.

215 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே சொதப்பலாகவே இருந்தது.இஷான் கிஷன் 1 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் என்ற பொறுப்பில் சில சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து ரன்களை உயர்த்தி வந்தார். அதன் பின்பு வந்த லிவிங்க்ஸ்டனின் சுழலில் சிக்கிய ரோஹித் ஷர்மா 44ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தந்து அதிரடி பாணியில் அதிரடியாகவே விளையாடி வந்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார்.

 மறுபுறம் அவருடன் க்ரீன் இணைந்து அதிரடியாகவே விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் க்ரீன் 67 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்த வருடம் ஐபிஎல்லில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் வெளியேற அணிக்கு இருந்த நம்பிக்கையும் போனது. கடைசி ஓவரை வீசிய அர்ஷ்திப் சிங் 2முறை ஸ்டெம்பை உடைத்தெறிந்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.                                    

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை