Ipl வரலாற்றில் சிக்சர்களில் ஸ்பெஷல் சாதனை படைத்த தோனி – என்ன தெரியுமா ?

ஐபிஎல் 2023 இல் இன்று மிகவும் அற்புதமான போட்டி நடக்கிறது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில், சென்னை சூப்பர் மற்றும் டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்ட

By ·

ஐபிஎல் 2023 இல் இன்று மிகவும் அற்புதமான போட்டி நடக்கிறது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில், சென்னை சூப்பர் மற்றும் டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியின் மூலம் கடைசி இரு ஓவர்களில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அடைந்தார்.

அதன் படி சென்னை அணியின் வீரர்கள் சற்று நிதானமாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதிக பட்சமாக டுபே 25 ரன்களையும்,ருதுராஜ் 24 ரன்களையும், ராய்டு 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

டெல்லி அணியின் பேட்டிங் மோசமனதாகவே இருந்து வந்தது, 20 ஓவர்கள் முடிவில் 140 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.அணியின் அதிக பட்சமாக ரூஸோ 35 ரன்களை மட்டுமே எடுத்தார், அதன் பின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகையால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் ஆட்டத்தின் போது, கேப்டன் எம்.எஸ்.தோனி முக்கிய பங்கு வகித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். கலீல் அகமதுவுக்கு எதிராக தோனி தனது வலிமையை வெளிப்படுத்தி இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.18-வது ஓவரில் சிஎஸ்கே அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், பின்னர் தோனி அதிரடியாக விளையாடி தனது பவர் ஹிட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தோனி எப்போதும் பினிஷ்ங் செய்வதில் கிங் என்று அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் அதை உறுதிப்படுதும் வகையில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை அணியின் விக்கெட்டுகள் விழ விழ அதன் பிறகு வந்த தோனி தனது பாணியில் அதிரடியை காட்ட தொடங்கினர். இந்த போட்டியில் 2 சிக்சர்களும் 1 பவுண்டரிகளும் அடித்துள்ளார். கடைசி இரு ஓவர்களில் அதிக பவுண்டரிகள் (209) அடித்த பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதற்க்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் பொலார்ட் (109) பவுண்டரிகள் அடித்து இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் டி வில்லியர்ஸ் (96) பவுண்டரிகள் அடித்து மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறார்.       

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை