கண்ணிருடன் விடைபெற்ற அம்பதி ராய்டு, ரோஹித் ஷர்மாவின் எந்த சாதனையை சமன் செய்தார் தெரியுமா?

ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை க

By ·

ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டிற்கு முன்னரே அம்பதி ராய்டு ஐபிஎல் போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என்று கூறியே இப்போட்டியில் பங்கேற்றார்.  

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். குஜராத் அணியின் அதிக பட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு அதிக பட்சமாக சாஹா 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்களிலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களை குவித்தனர்.

215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி  வைக்கப்பட்டது. மழையின் காரணமாக நிருத்தி  வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 26 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.

தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் ஜடேஜாவின் அதிரடியால் இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 5 வது மூறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.

அம்பதி ராய்டு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு தனது ஒய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தனது திறைமையை நிருபித்து வந்தார். ஆனால் இப்போது அவர் ஐபிஎல் தொடரிலும் தனது ஒய்வை அறிவித்தார். இவர் இதற்க்கு முன்னரும் ஒய்வு பெறுவதாக ட்வீட் செய்து விட்டு பிறகு அதை நீக்கினார். அதனாலேயே தற்போது NO YOU TURN என்றும் கூறிப்பிட்டு ஒய்வை அறிவித்தார். அவர் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் இவர் ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அம்பதி ராய்டு ஆரம்ப கட்ட ஐபிஎல்லில் மும்பை அணிக்காக தனது திறைமையை காட்டி வந்தார். அதாவது 2010 முதல் 2017 வரை மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின் 2017 முதல் 2023 வரை சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இது வரை இவர் இவ்விரு அணிகளையும் சேர்த்து 8முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளார். அதில் மும்பை அணிக்காக 3 கோப்பையையும் சென்னை அணிக்காக முன்று கோப்பையையும் வாங்கியுள்ளார். இதற்க்கு மூன் ரோஹித் ஷர்மா மட்டுமே 6 ஐபிஎல் கோப்பையை வாங்கி இருந்தார். இந்த போட்டியின் மூலம் அதனை சமண் செய்தார் அம்பதி ராய்டு.                

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை