கடைசி ஓவர் வரையில் இழுத்த ஹர்திக், கடைசியில் ஹீரோவான இஷாந்த் – பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்திய டெல்லி
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணிக்கும் கடைசியில் உள்ள அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணிக்கும் கடைசியில் உள்ள அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் சால்ட் களமிறங்கினார்கள். முதல் பந்திலே சால்ட் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் அணியின் வார்னரும் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். குஜராத் அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் திணறியே வந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். ஷமியின் அற்புதமான பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ரூஸோ 8 ரன்களிலும்,மனிஷ் பண்டே 1 ரன்களிலும்,பிரியம் கார்க் 10 ரன்களில் வெளியேற அதன் பின் வந்த அக்சர் பட்டேல் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு புறம் நிதனமாக விளையாடி வந்த அமன் அதன் பின் தனது அதிரடியயை காட்டதொடங்கினரர். 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கானிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரிப்பல் பட்டேல் 23 ரன்னில் வெளியேறினார். இறுதியில் 20 வது ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டுகளை இழந்த நிலையில் 130 ரன்களை அடித்தனர் டெல்லி கேபிடல்ஸ் அணி.
131 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களம் கண்ட குஜராத் அணி, முதல் ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேற குஜராத் அணிக்கு தடுமாற்றத்தை தந்தது. அதன் பின் களமிறங்கிய கில் 6 ரன்களில் வெளியேறினார். மற்றொரு புறம் விளையாடிய ஹர்திக் பாண்டியா அணியின் ஸ் ஸ்கோரை உயர்த்தி வந்தார். விஜய் ஷங்கர் 6 ரன்களில் வெளியேற, அதன் பின் மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் சென்று ஏமாற்றத்தை தந்தார். அபினவ் மனோகர் 26ரன்களில் வெளியேறினார்.
வெற்றி அருகில் சென்ற குஜராத் அணிக்கு கேப்டன் பக்க பலமாக இருந்து அணியை வழிநடத்தினார், இருப்பினும் குஜராத் அணியால் வெற்றி பெற முடியவில்லை. திவட்டியா அதிரடியாக விளையாடி 7 பந்துகளில் 20 ரன்களை அடித்தார். குஜராத் அணியால் 20 வது ஓவர்கள் முடிவில் 125 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆகையால் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அற்புதமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.