“அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்” இளம் வீரர்களை பாராட்டிய ரோஹித் சர்மா

ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்த

By ·

ஐபிஎல் 2023 க்கான 25 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் எதிர்கொண்டன. இப்போட்டியானது ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற சன்ரைசஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர். மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் சீரான இடைவெளியில் சில சிக்சர்களையும் மற்றும் பவுண்டரிகளையும் பறக்க விட்டனர்.

ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தின் முலம் ஐபிஎல்லில் தனது 6000 ரன்களை கடந்த நிலையிலே நடராஜனிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்களிலே வெளியேறினார். நிதனகமாக விளையாடிய க்ரீன் 33 பந்துகளில் தனது அரை சத்தை பூர்த்தி செய்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். டிம் டேவிட் மற்றும் க்ரீன் இணைந்து கடைசி ஓவரை வீசிய நடராஜனின் பந்துகளை பறக்கவிட்டு வந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தனர்.

193 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரூக் 9 ராகுல் த்ரிப்பாட்டியும் 7 ரன்களிலே வெளியேறினார். சன்ரைசஸ் அணியின் வீரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். சன்ரைசஸ் அணிக்கு எந்த பேட்ஸ்மேனும் நிலையாக நின்று விளையாட முடியமால் தவித்தனர். அந்த நிலையில் தான் க்ளாசன் சாவ்லா ஓவரை பயன்படுத்தி சிக்சர்கள் மற்றும் புவண்டரிகளை பறக்கவிட்டனர். அதன் வந்த வீரர்கள் போராடி வந்த நிலையிலும் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் அணி தோல்வியை தழுவியது.

இளம் வீரர்களை பாராட்டிய ரோஹித் சர்மா

திலக் வர்மா கடந்த சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மிக முக்கிய வீரராக இருந்து வருகிறார். திலக் வர்மாவை பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “கடந்த சீசனில் திலக்கைப் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம், அவருடைய பேட்டிங்  எனக்கு மிகவும் பிடிக்கும்”. அதே போல்  இது அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் முதல் சீசன். அர்ஜுன் கடந்த போட்டியில் தான் அறிமுகமானார்.

அர்ஜுன் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியது மட்டுமல்லாமல் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டையும் கைப்பற்றினார். அர்ஜுனை பாராட்டி ரோஹித் சர்மா கூறினார். “வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்கு வந்துவிட்டது. அர்ஜுன் மூன்று வருடங்களாக இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவர் தனது திட்டங்களில் தெளிவாக இருக்கிறார். அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்து யார்க்கர்களை வீச முயற்சி செய்கிறார் .”அவர் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்இளம் வீரர்களை பாராட்டிய ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை