ஐபிஎல் 2023ல் CSKவின் நம்பமுடியாத வெற்றியை பார்த்து புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் – வைரலாகும் ட்விட் பதிவுகள் இதோ!

ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை க

By ·

ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி கோப்பையை கைப்பற்றியது. இது குறித்து பல வீரர்கள் ட்விட்டரில் அவர்களது கருத்தினை தெரிவித்து வந்தனர்.

 

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். குஜராத் அணியின் அதிக பட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு அதிக பட்சமாக சாஹா 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்களிலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களை குவித்தனர்.

சென்னை அணியின் பௌலிங்கை பார்த்தல் மிகவும் மோசமாகவே இருந்து வந்தது. இறுதிப் போட்டியில் வரலாறு காணாத ரன்களை வாரி வழங்கியது. தீக்ஷனா 4 ஓவர்களை வீசி 36 ரன்களை வழங்கினார். தீபக் சாஹர் மற்றும் ஜடேஜா தலா 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை வீழ்த்தி 38 ரன்களை வழங்கினார்கள். பத்திரான 4 ஓவர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தி 44ரன்களையும், தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார்.            

215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி  வைக்கப்பட்டது. மழையின் காரணமாக நிருத்தி  வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 26 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.

தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் ஜடேஜாவின் அதிரடியால் இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 5 வது மூறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.

இந்த போட்டியில் கடைசி 15 வது ஓவர் வரை சென்ற இப்போட்டியில் குஜராத் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த ஓவரை வீசிய மோஹித் ஷர்மா ஆரம்பத்தில் 4 பந்துகளில் குஜராத் அணியின் உறுதி படுத்தி விட்டார், இருப்பினும் அதன் பின் வீசிய 2 பந்துகளில் போட்டி தலை கீழாக மாறியது. 2 பந்துகளில் 10 ரன்கள் வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. அதில் முதல் பந்தில் 6 விளாசி சென்னை அணியின் வெற்றியை 75% உறுதி செய்தார். கடைசி பந்தில் 4 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு கோப்பையை வாங்கி தந்தார்.

         

இப்போட்டியை கூறித்து பல்வேறு வீர்கள் சென்னை அணியின் வீரர்களை புகழ்ந்து தள்ளினர். இதிலும் குறிப்பாக ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்த அவர் தோனியை பாராட்டி தள்ளினார்.   

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை