இது நடந்ததுனால் போட்டி எங்களுக்கு சாதகமாக இருந்தது – வெற்றியை கூறித்து பேசிய டு ப்ளசிஸ்.
ஐ.பி.எல் 2023 இன் 43 வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின, அப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவ
ஐ.பி.எல் 2023 இன் 43 வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின, அப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.அதன் பின் களம் கண்ட லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேப்டன் டுபிளெஸ்ஸியின் நெஞ்சு பெருமிதத்துடன் விரிந்தது.இந்த வெற்றியால் கேப்டன் டுபிளெசிஸ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியை கூறித்து அவர் கூறுகையில்,
போட்டியின் போது, பெங்களூருவின் மைதானத்தை விக்கெட்டுடன் ஒப்பிடும்போது இந்த விக்கெட் முற்றிலும் நேர்மாறானதுஎன்றும் , சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது கடினமாக இருந்தது என்றும், ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு இணைந்ததால் மகிழ்ச்சியாக இருந்ததும் என்றும் கூறினார். முதல் 6 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதன் பின் மைதானத்தின் விக்கெட்டுகள் கடினமாயிற்று. ஆறு ஓவர்களில் அரைசதம் அடித்தது போட்டியை மாற்றும் ஒன்றாகும்.
முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது கடினமாக இருந்தது.135 ரன்களை விரும்பியிருந்தேன் – என் மனதில் அது ஒரு நல்ல ஸ்கோர் . நாங்கள் களத்திற்குச் செல்வதற்கு முன், இது மேட்ச் வின்னிங் ஸ்கோர் என்று சக வீரர்களிடம் கூறினேன். பவர்பிளேயில் 2-3 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு என்றும், குறிப்பாக கே எல் ராகுல் இல்லாததால், அது கடினமாக இருக்கும் என்று உணர்ந்தேன்.
கரண் ஷர்மா மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வந்தார். எப்பொழுதும் கடின உழைப்பை செய்தாலும் அங்கீகாரம் கிடைக்காதவர்களில் ஒருவர் கரண் ஷர்மா. ஹேசில்வுட் மீண்டும் அணியில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. என்றும் போட்டிக்கு பின்னர் டுப்ளசிஸ் கூறினார்.