கஷ்ட காலங்களில் தன் மனைவி தந்த ஆதரவை பற்றி உருக்கமாக பேசிய இஷாந்த் ஷர்மா.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் மீண்டும் களமிறங்கி, தனது அற்புதமான பந்துவீச்சால் மீண்டும் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இஷாந்த் ஷர்மா வந்து இணைந்த பிறகு, அந்த அணிக்கு நிறைய பலம் க

By ·

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் மீண்டும் களமிறங்கி, தனது அற்புதமான பந்துவீச்சால் மீண்டும் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இஷாந்த் ஷர்மா வந்து இணைந்த பிறகு, அந்த அணிக்கு நிறைய பலம் கிடைத்துள்ளது. இவர் டெல்லி அணிக்காக இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், அந்த இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதே சமயத்தில், ஐபிஎல் 2023 இல் டெல்லி கேபிடல்ஸ் மிகவும் மோசமான சூழ்நிலையில் புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் இருந்து   கொண்டிருக்கிறது, ஆனால் அவர் அணிக்குத் திரும்பியதிலிருந்து, டெல்லி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது இல்லை. ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் களமிறங்கியதற்கு தனது மனைவி தான் காரணம் என இஷாந்த் சர்மா புகழாரம் சூட்டினார்.டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தனது கடைசி ஐபிஎல்லை 2021- ஆம் ஆண்டு விளையாடினார்.

இருப்பினும், 2 வருடங்கள் கழித்து ஐபிஎல் 2023 இல் அவர் மீண்டும் திரும்பியுள்ளார். இஷாந்த் ஷர்மா தனது அபாரமான பந்துவீச்சால் இதுவரை 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மீண்டும் வந்த பிறகு இஷாந்த் தனது மனைவியை மிகவும் பாராட்டினார்.எந்தவொரு நபரின் கடினமான நேரத்திலும், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் முக்கியமானது, எனது மனைவியும் எனது குடும்பத்தினரும் எனக்கு மிகவும் ஆதரவளித்துள்ளனர். நீங்கள் ஒரு விஷயத்தில் ஏமாற்றமடையும் போது, நீங்கள் சொல்வதைக் கேட்பவர்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.

“நான் காயமடைந்த பிறகு அல்லது நான் அணியில் தேர்வு செய்யப்படாதபோது எனது மனைவி என்னை ஒருபோதும் கிரிக்கெட்டிலிருந்து விலகச் சொன்னதில்லை. ஒரு நபரின் உடல் அவரை ஆதரிக்கும் வரை, அவர் மிக உயர்ந்த மட்டத்தில் விளையாட முடியும் என்று அவர் உணரும் வரை, அவர் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் விளையாட்டின் பின்னணியுடன் தொடர்புடையவர் என்பதால் என் மனைவி அதைப் புரிந்துகொள்கிறார்.

ஐ.பி.எல் 2023 இல் சிறப்பாக செயல்பட்டதிலிருந்து, இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இஷாந்த் ஷர்மாவை விட திறமையான பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக போட்டியிடுவதால் இஷாந்த் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும் கூறிவருகின்றனர்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை