ப்ளே ஆப்பிற்க்கான வாய்ப்பை தக்க வைத்த லக்னோ. கடைசி ஓவரில் சொதப்பிய மும்பை.

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இப்போட்டியையும் மற்றும் இனி வரும் போட்டியையும் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப்பிற்கு தகுதி பெற வ

By ·

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா  கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இப்போட்டியையும் மற்றும் இனி வரும் போட்டியையும் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப்பிற்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களம் கண்ட லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தன. அணியின் தொடக்க வீரர் ஹூடா 5 ரன்களில் வெளியேற ப்ரிராக் மன்கட்த் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தார். அதன் பிறகு இணைந்த ஸ்டானிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா நிதானமாகவே விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ருனால் பாண்டியாவும் ரிடேர்ட் அவுட் ஆகி வெளியேறினார்.

அற்புதமாக விளையாடி அணியின் ஸ்கோரை மட மடவென உயர்த்தி வந்தார். அதன் பின்னர் ஸ்டானிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். லக்னோ அணி ஆரம்பத்தில் சொதப்பி வந்தாலும் க்ருனால் பாண்டியா மற்றும் ஸ்டானிஸ் அணிக்கு நன்றாக ஸ்கோரை உயர்த்தினர். 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது. ஸ்டானிஸ் மட்டுமே 47 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தார்.

178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹிட் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே குடுத்தனர். இருவரும் இணைந்து 90 ரனகளை குவித்த நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவருக்கு பின்னரே இஷான் கிஷன் 59 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பெரிதும் எதிர் பக்கபட்ட சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

வதேரா 16 ரன்களிலும், விஷ்ணு வினோத் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேற மும்பை அணி தோல்வியை நோக்கி சென்றது.இருதியில் 20 வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப்பிற்குள் செல்வதற்க்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.                   

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை