முடிந்தது என நினைத்த லக்னோ, முடித்து காட்டிய குஜராத் – 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் திரில் வெற்றி

ஐபிஎல் 2023 க்கான 30 லீக் போட்டியில் லக்னோவில் உள்ள ஏகன மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரர்கள் கில் மற்று

By ·

ஐபிஎல் 2023 க்கான 30 லீக் போட்டியில் லக்னோவில் உள்ள ஏகன மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத்  அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரர்கள் கில் மற்றும் சாஹா பேட்டிங்கில் களமிறங்கினர்கள். ஆரம்பம் முதலே தொடக்க அட்டகரர்கள் லக்னோ அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். கில் ரன் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் வந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் ஸ்கோர்ரை உயர்த்த பொறுமையாகவே விளையாடி வந்தார். 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 44 ரன்களில் மட்டுமே இருந்தது. க்ருனால் பண்டியாவின் சுழலை தாக்குபிடிக்க முடியாமல் சாஹா 47 ரன்களிலே வெளியேறினார். இந்நிலையில் பேட்டிங் செய்ய வந்த மனோகர் 3 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். லக்னோ அணியின் பந்து வீச்சி சிறப்பாகவே இருந்தது.வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பல் நிலையிலே இருந்தது.

அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் தனது அதிரடியை காட்ட தொடங்கினரர். ரவி பிஷ்னோய் ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியையும் அடித்து விளாசினார். அந்த நிலையில் இருந்து அணியின் ஸ்கோர் மட மடவென உயர்ந்த முயற்சி செய்தார். ஹர்திக் பண்டியாவும் தந்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்டனின்ஸ் ஓவரில் 66 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆரம்பம் முதலே குஜராத் அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையிலே இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

136 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய லக்னோ அணியின் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியை காட்டத்தொடங்கினார்கள். குஜராத் அணியின் பௌலர்களை நான்கு பக்கமும் அடித்து விளாசினார்கள். கைல் மேயர்ஸ் 24 ரன்களிலே வெளியேற வெளியேற வெளியேற லக்னோ அணி சற்று பின்னடைவையே சந்தித்தனர். மற்றொரு பக்கம் கே.எல்.ராகுல் நிதனமாக விளையாடி அணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விளையாடினார். கேப்டன் என்ற பொறுப்பில் பொறுமையாகவே விளையாடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் கே.எல்.ராகுல்.

இக்கட்டான சூழ்நிலையில் க்ருனால் பாண்டியா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த பூரான் முதல் பந்திலிருந்தே தடுமாற்றத்தில் இருந்தார். 1 ரன் எடுத்த நிலையிலே ஹர்திக் பண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். லக்னோ  அணி இப்போட்டியை கடைசி வரை கொண்டு சென்றது, கடைசி ஓவர் வரையிலும் லக்னோ அணி போராடி கொண்டே இருந்தது. கடைசி ஓவரை வீசிய மோஹிட் ஷர்மா அற்புதமாக பந்து வீசி வெற்றியை பெற்று தந்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த லக்னோ அணி முதல் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தது,அதன் பிறகே ராகுலின் விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றியை உறுதி படுத்தினார் மோஹிட் ஷர்மா. அந்த ஒவேரிலேயே லக்னோ 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. தோல்வியின் விளிம்பில் இருந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது குஜராத் அணி                            

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை