தலைவரையே கோபப்படுத்திடங்களே, CSK vs RCB போட்டியில் மொயின் அலி மீது கோபமடைந்த தோனி- வீடியோ உள்ளே

ஐபிஎல் 2023 க்கான 24 போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள், பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணிக்கு பேட்டிங் வரிசை நன்றாகவே அமைந்தது. கான்வே மற்றும் துபே வின் அற்புதமான ஆட்டத்தால் சென்னை அணி 6 விக்கட்டுகளை இழந்த நிலைய

By ·

ஐபிஎல் 2023 க்கான 24 போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள், பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணிக்கு பேட்டிங் வரிசை நன்றாகவே அமைந்தது. கான்வே மற்றும் துபே வின் அற்புதமான ஆட்டத்தால் சென்னை அணி 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் 226 ரன்களை குவித்தது.கான்வே 83 ரன்களும், துபே 52 ரன்களையும் அடித்தனர். 227 ரன்களை இலக்காக கொண்ட பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடியை காட்டி வந்தனர். இந்நிலையில் தான் தோனி கோபம் பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கேப்டன் கூல்

தோனி சென்னை அணிக்காக பல வருடங்களாக விளையாடி கொண்டுள்ளார். அவர் சென்னை அணிக்காக 4 முறை சாம்பியன் பட்டத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். இவருக்கு சென்னை மட்டுமல்லாமல் உலக முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகமாகவே உண்டு. இவர் இந்திய அணிக்கு கேப்டனாகவும் விளையாடி அனைத்து விதமான கோப்பைகளையும் கைப்பற்றி உள்ளார். இவர் தற்போது சென்னை அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த வருடம் தான் தோனிக்கு கடைசி வருடம் எனவும் இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார் எனவும் வதந்தி பரவி வருகிறது. இதை தோனி இன்று வரை உறுதி செய்யவில்லை.

தோனி பல்வேறு கட்டக்களில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூலாக இருந்து அணியை வழிநடத்துவார். என்ன தான் கூலாக இருந்தாலும் அவரும் சில சமயங்களில் அதிக படியாக கோபத்தை வெளிப்படுத்துவார். அப்படி பட்ட ஒரு நிகழ்வு தான் தற்போது நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நடந்தேறியது. இமாலய இலக்கனா 226 ரன்களை அடித்தும் கடைசி வரை தோல்வியில் பிடியிலே இருந்தது சென்னை அணி. அப்போட்டியில் பெங்களூர் அணியின் வீரரை ரன் அவுட் செய்வதற்க்கான வாய்ப்பு இருந்தும் பில்டிங் சுமாராகவே இருந்ததால் ரன் அவுட் செய்ய முடியவில்லை. மொயின் அலி பார்த்து தோனி கோபப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.              

அந்த போட்டியில் நடந்தது

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது. சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியின் பௌலிங்கை அனைத்து பக்கங்களிலும் அடித்து 226 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளஸிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) பெங்களூரு அணியயை கிட்ட தட்ட வெற்றிக்கே கொண்டு சென்றனர். ஆனால் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் யாலும் நிலையாக நின்று விளையாட முடியாததால்  8ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டி

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சிதம்பரம் மைதானத்தில் மொத உள்ளன. சன்ரைசஸ் அணி இது வரை சென்னை அணியை சென்னை மைதானத்தில் ஒரு முறை கூட வென்றது இல்லை. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் அதை மாற்றி அமைக்குமா? அல்லது  சென்னை அணியே வெற்றி பெருமா? சன்ரைசஸ் அணி 5 போட்டிகளில் 2 போட்டியை மட்டுமே வென்று 9 இடத்திலும்சென்னை அணி 5 போட்டிகளில் 3 போட்டியை வென்று 3 இடத்தில் உள்ளது. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க வாய்ப்புள்ளதாக செய்தி வந்துள்ளது.

                                          

                                                                  

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை