இமாலய இலக்கை எளிதாக எட்டிய மும்பை அணி – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு செல்ல இப்போட்டியில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட

By ·

ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இவ்விரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு செல்ல இப்போட்டியில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் கோலி மற்றும் டுப்ளசிஸ் களம் கண்டனர். ஆனால் பெங்களூரு அணிக்கு ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த ரவாத் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். அதன் பின் அதிரடியை காட்டத் தொடங்கிய டு ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ரன்களை மடமடவென உயர்த்தி வந்தனர். அற்புதமாக இணைந்து விளையாடி 100  பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர்.

அதன் பின் மேக்ஸ்வெல் 68 ரன்களில் ஆட்ட.மிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு வந்த லோம்ரார் 1 ரன்களில் வெளியேற அணியின் விக்கெட்டுகள் விழ தொடங்கின. டு ப்ளசிஸ் 65 ரன்களில் வெளியேற, மற்றொரு பக்கம் தினேஷ் கார்த்திக் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வர 30 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது பெங்களூரு அணி.

200 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலே அதிரடி பாணியை விட வில்லை . இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் பெங்களூரு அணியின் பௌலிங்கை சிதறடித்து வர 42ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் கேப்டன் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்க்கு பின்  வந்த சூர்யகுமார் யாதவ் அவருடைய சிறப்பனாக இன்னிங்சை விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார்.

அவருடன் இணைந்து விளையாடி வந்த வதேரா 34 பந்தில் 52 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இவர்களின் சிறப்பான இன்ன்னிங்சால் 200  இமாலய இலக்கை 16.3  ஓவர்களிலே எட்டி வெற்றி பெற்றனர்.  இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை