கடைசி 6 ஓவரில் ரன்களே வரவில்லை, எதிர் அணியின் வீரரை பாராட்டி பேசிய டு ப்ளசிஸ்.

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மிக அற்புதமான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில

By ·

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மிக அற்புதமான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் குவித்தது.

 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. இஷான் கிஷன் மும்பை அணிக்கு முதலில் வலுவான இன்னிங்ஸ் தொடங்கி வைத்தார், பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா இணைந்து போட்டியை முடித்தனர். தோல்விக்குப் பிறகு கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸ் இந்த 4 வீரர்களையும் வெற்றிக்கு பாராட்டினார்.

விக்கெட்களை பொறுத்தவரை நாங்கள் குறைந்தது 20 ரன்கள் குறைவாகவே அடித்து இருந்தோம் என்று நினைக்கிறேன். அவர்கள் வலுவான சேஸிங் அணி மற்றும் ஆழமாக பேட்டிங் செய்கிறார்கள். கடைசி 5 ஓவர்களில் எங்கள் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை, அந்த 5 ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்து ஏமாற்றம் அடைந்தோம். “200 ரன்கள் என்ற இலக்கு குறித்து பேசிய ஃபாஃப் டுபிளெசிஸ், “200 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான் இருப்பினும், பௌலிங்கை வேகத்தை குறைத்து இருக்க வேண்டும், முதல் 6 ஓவர்களின் வேகத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

சூர்யாவை பாராட்டிய பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப், “அவர் சிறந்தவர்களில் ஒருவர், அவர் அதிரடியாக விளையாடும் போது அவரைத் தடுப்பது கடினம். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிராஜ் அபாரமாக ஆடினார். போட்டியின் முடிவில் விக்கெட்டுகள் மெதுவாக இருக்கும்போது, முதல் 6 ஓவர்களில் சுமார்  60 ரன்கள் எடுப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.” என்றும் பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் கூறினார்.இப்போட்டியின் வெற்றியின் மூலம் ப்ளே ஆப் ரேஸில் மும்பை அணி முன்னேறியுள்ளது. அதாவது புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு சென்றுள்ளது.   

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை