தோனி கேப்டன்சியின் கீழ் விளையாடுவது குறித்து பேசிய ரஹானே.

ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முத

By ·

ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா  முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர். கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற, அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின் ரஹானே மற்றும் டுபே கூட்டணி அமைத்து கொல்கத்தாவின் பந்து வீச்சளரை அனைத்து பக்ககளிலும் அடித்து வான வேடிக்கையை காட்டினார்கள். 16 பந்துகளிலே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். இந்த கட்டத்தில் துபே 20 பந்துகள் அரை சத்தம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழக்க ரஹானே தொடர்ந்து விளையாடி 29 பந்துகளில் 19 ரன்கள் விலாசினார். இதனால் 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர் சென்னை அணி.

இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒட்டுமொத்த அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறியது சிஎஸ்கே. இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் அஜிங்க்யா ரஹானே.

ரஹானே கூறியது “எனக்கு தெளிவான மனநிலை மட்டுமே இருந்தது. உங்கள் மனம் சரியாக இருந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நான் எனது விளையாட்டை ரசிக்க முயற்சிக்கிறேன். அதன் பிறகு நான் எனது ஷாட்களை விளையாடி வேகத்தைத் தக்கவைக்க விரும்பினேன். நான் இதுவரை எனது அனைத்து போட்டிகளையும் ரசித்துள்ளேன், இன்னும் சிறந்தவை வரவில்லை என்று உணர்கிறேன்”.

இது ஒரு சிறந்த பாடம், நான் பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக தோனியின் கீழ் விளையாடி வருகிறேன், இப்போது CSK இல் கூட இது ஒரு சிறந்த பாடம் ஆகும். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் பல விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடிகிறது. அவரது கேப்டன் பொறுப்பில் இருந்தபோது நான் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளேன், இப்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றினாலே போதுமானது என்று தெரிவித்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை