சொந்த மண்ணில் தோல்வியை பற்றி மனம் திறந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.
ஐபிஎல் 2023 க்கான 26லீக் போட்டிகளில் அட்டவணையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஜெய்பூரில் உள்ள சாவை மான்சிங் மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்க
ஐபிஎல் 2023 க்கான 26லீக் போட்டிகளில் அட்டவணையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஜெய்பூரில் உள்ள சாவை மான்சிங் மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதுவே அவருக்கு பாதகமாக அமைந்தது . போட்டியின் தோல்வியை பற்றி சந்தோஷப்பட்ட சஞ்சு.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் மேயர்ஸும் பேட்டிங்கில் களமிறங்கினர். லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே ரன்களை அடிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதற்க்கு ஏற்றார் போல் ராஜஸ்தான் அணியும் கைக்கு வரும் கேட்ச்களை விட்டு வண்ணமே இருந்தன. அதன் பிறகு ரன்களை அடிக்க வேகம் எடுத்தனர், வேகம் எடுத்த நிலையிலே கே.எல்.ராகுல் 39 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். . சஞ்சு சாம்சன் அடித்த ரன் அவுட்டால் பூரான் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 154 மட்டுமே அடித்தனர்.
155 ரன்களை எடுத்தல் வெற்றி என்று களமேரங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினர்கள். லக்னோ அணியின் பௌலர்களல் தொடக்க ஆட்டகரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். அதன் பிறகு தான் ராஜஸ்தான் அணிக்கு சோதனை ஆரம்பித்து. இறுதியில் ராஜஸ்தான் அணி இறுதியில் 144 ரன்களை மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் எளிதான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் மிகவும் ஏமாற்றமடைந்தார், இந்த ஏமாற்றத்தை பற்றி அவர் போட்டிக்கு பின் கூறினார்.நங்கள் போட்டியை இறுதி வரை கொண்டு சென்றோம் இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை.
தோல்வியை பற்றி கூறிய சஞ்சு சாம்சன்
இதனுடன், தோல்விக்கான முக்கிய காரணத்தையும் கூறிய சஞ்சு, இழப்புக்குப் பிறகு அவ்வளவு பெரிய உணர்வு இல்லை, ஆனால் பரவாயில்லை அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம் எனவும், ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கவேண்டும். கண்டிப்பாக பாடம் எடுத்து முன்னேறுவோம். எங்களிடம் இருந்த பேட்டிங் வரிசை நன்றாகவே இருந்தது.
இன்னிங்ஸின் நடுவில் அணி ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டை இழப்பது குறித்து கவலை தெரிவித்த சஞ்சு, “அவர்கள் நன்றாகப் பந்து வீசினார்கள், நாங்கள் போட்டியை கடுமையாக எடுத்து செல்ல முயன்ற போதெல்லாம், நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம்” அதுவே தோல்விக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். ஒரு விளையாட்டில் நீங்கள் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அதில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள், அதுதான் விளையாட்டின் அழகு. இதிலிருந்து நங்கள் நிறைய கற்று கொள்வோம்.