வெற்றியின் ரகசியம் கூறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா.

இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா அணி தொடர் தோல்வியில் இருந்து மீளவும் புள்ளி பட்டியலில் முன்னேறவும் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் அதிகபட்சமாக ராய் 56 ரன்களையும், கேப்டன் ராணா 48 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 31 ரன்களையும் குவித்தனர்.  

201 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணியின் அதிகபட்சமாக கேப்டன் கோலி 54 ரன்களையும், லோம்ரோர்  34 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பெங்களூரு அணிக்கு எதிராக கொல்கத்தா அணி, தொடர் தோல்விகளை முறியடித்து அபார வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு, கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா

கடந்த 3-4 போட்டிகளின் டாஸில் நான் இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தேன். நாம் கூட்டாக நன்றாக விளையாடினால், முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் என்றும், மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார். நாங்கள் ஆரம்பம் முதலே அதிக ரன்களை குவிக்க விரும்பினோம். அதிக பனி இல்லாததால் இரண்டாவது இன்னிங்ஸில் அது மாறும் என்று உணர்ந்தேன். அது பெரிதாக மாறவில்லை, ஆனால் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். நான் அவருடன் (சுயாஷ் ஷர்மா) பேசும்போதெல்லாம், அவர் எப்போதும் கையை உயர்த்தினார்.

நான் வேலையைச் செய்வேன் என்று அவர் எப்போதும் கூறினார். உங்களுக்கு எதிராக யார் பேட்டிங் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டாம், உங்கள் சொந்த பந்துவீச்சில் கவனம் செலுத்துங்கள் என்று நாங்கள் அவரிடம் கூறி வந்தோம் என அணியின் கேப்டன் ராணா கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை