போட்டியில் காயமடைந்த ரஸல். ஐபிஎல் 2023 இல் தொடரில் இருந்து வெளியேற வாய்ப்பு!

கொல்கத்தா மற்றும் சன்ரைசஸ்அணிகளிக்கு எதிரான போட்டியில், நேற்று ஒரு சிறப்பான போட்டி காணப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா டாஸ் வென்று முத

By ·

கொல்கத்தா மற்றும் சன்ரைசஸ்அணிகளிக்கு எதிரான போட்டியில், நேற்று  ஒரு சிறப்பான  போட்டி காணப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ருக் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

ஹைதரபாத் அணி பவர்ப்ளே முடிவில் 60 ரன்களுக்கு மேல் குவித்தனர். ஹைதராபாத் அணி 20 வது ஓவர் முடிவில் 228 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸல் வீசிய முதல் ஓவரிலே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவை மீண்டும் போட்டிக்கு கொண்டு வந்தார். ஆனால் இப்போட்டியில் பீல்டிங் செய்யும் போது ரஸல் காயம் அடைந்தார். இது கொல்கத்தா அணிக்கு பெரும் அடியாக இருக்கும்.

காயம் காரணமாக விலகுவார ரஸல் !

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் அதிரடி ஆட்டக்காரான மூத்த ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் படுகாயமடைந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கால் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஓவரை கூட முடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக, ஷர்துல் தாக்கூர் தனது மீதமுள்ள ஓவரில் 5 பந்துகளை வீச வேண்டியிருந்தது.

ஆண்ட்ரே  ரஸல் இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த போட்டியில் ஆரம்பம் முதலே நல்ல தொடக்கத்தில் காணப்பட்டார். அவர் தனது முதல் ஓவரிலேயே தனது சொந்த அணிக்கு வெற்றியைக் கொடுத்தார். அதன் பிறகு ராகுல் திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பினார். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மாவின் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார் ரஸல். ரஸ்ஸல் 2.1 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும்  பெற்று தந்தார்.அவருடைய காயத்தின் தன்மை பற்றி இன்னும் தெரியவில்லை. அவர் தொடரில் இருந்து வெளியேறினால் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை