தந்தையை டக் அவுட் செய்தவரை பழிவங்கும் வகையில் அவரின் விக்கெட்டை எடுத்த மகன் அர்ஜூன் டெண்டுல்கர்.
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் அந்த நிகழ்வு நடந்தேறியது. நேற்றைய போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நன்றாக வீசி அணிக்கு வெற்றியை கொண்டு வந்தார். தனது தந்தையின் முதல் விக்கெட்டுக்கு பழிவாங்கும் போ
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் அந்த நிகழ்வு நடந்தேறியது. நேற்றைய போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நன்றாக வீசி அணிக்கு வெற்றியை கொண்டு வந்தார். தனது தந்தையின் முதல் விக்கெட்டுக்கு பழிவாங்கும் போட்டியில் தனித்துவ சாதனை படைத்தார் அர்ஜுன் டெண்டுல்கர்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் , மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி ஐபிஎல் தொடரின் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி வரலாறு படைத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை எடுத்தன் முலம் ஐபிஎல்லில் கணக்கை தொடங்கினர் அர்ஜுன் டெண்டுல்கர்.
இந்த போட்டியில் அர்ஜுன் 2.5 ஓவர்களில் 18 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வடிவில் எடுத்த இடம் அர்ஜுனின் விக்கெட்டின் சிறப்பு. அதே நேரத்தில், ரஞ்சியில் சச்சின் டெண்டுல்கரை டக் அவுட் செய்த ஒரே பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மட்டுமே.
ஐபிஎல்லில் அர்ஜுன் டெண்டுல்கர் விக்கெட் எடுப்பதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில், நடந்த ரஞ்சி டிராபி போட்டியில், புவனேஷ்வர் குமார் சச்சினை டக் அவுட் செய்தார். 2008-09 ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் புவினேஷ்வர் குமாரால் சச்சின் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சச்சின் விக்கெட்டை புவி வீழ்த்திய அதே மைதானத்தில் அர்ஜூன் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டையும் கைப்பற்றினார் என்பதுதான் அர்ஜுன் விக்கெட்டின் சிறப்பு. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் புவியை ஆட்டமிழக்கச் செய்து ஐபிஎல்லில் தனது முதல் விக்கெட்டையும் அர்ஜுன் அற்புதமாகப் எடுத்தார்.
1st Hundred in Ranji Debit
— 𝑨kul. (@Loyalsachfan01) April 18, 2023
1st wicket in IPL#ArjunTendulkarpic.twitter.com/zkcvkcAnym
மும்பை அணி வெற்றி பெற்றது
இப்போட்டியில் அர்ஜுன் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதே நேரத்தில், போட்டியில், மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யும் போது 192 ரன்கள் எடுத்தது, இதில் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். அதே சமயம் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடியாமல் 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.