கேப்டனாக முதல் போட்டியிலே வெற்றியை தேடி தந்த சூர்யகுமார் யாதவ், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த மும்பை.
ஐபிஎல் 2023 க்கான 22 லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வந்தார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பல்வ
ஐபிஎல் 2023 க்கான 22 லீக் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வந்தார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது மும்பை அணி. அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல்லில் பங்கேற்றார். அர்ஜூன் டெண்டுல்கர் தான் மும்பை அணிக்காக முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
ஆரம்பதிலையே சொதப்பி வந்தனர் கொல்கத்தா அணி.அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். மறுபுறம் தடுமாற்றத்தை சந்தித்த குர்பாஸ் 8 ரன்களிலே வெளியேறினார். அதற்க்கு பிறகு வந்த கேப்டன் ரானாவும் 5 ரன்களிலே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.
யார் வெளியேறினாலும் அதிரடியாகவே விளையாடி 23 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார் வெங்கடேஷ் ஐயர். அற்புதமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் யாரும் மும்பை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
186 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கினார்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ரோஹித் ஷர்மா இம்பேக்ட் பிளேயராக ஒபனிங் செய்தார்.ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 64 இருக்கும் போது ரோஹித் ஷர்மா சுயாஷிடம் விக்கெட்டை இழந்தார்.நன்றாக விளையாடி வந்த இஷான் கிஷன் 58 ரன்களை எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தியிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன் பிறகு வந்த அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிக்சர்களை அடித்து ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். திலக் வர்மா 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 17. ஓவர்களிலே 188 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக முதல் போட்டியிலே வெற்றியை தேடி தந்தார்.