வீடியோ : ஒரே ஓவரில் டெல்லி அணியின் 3 பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தமிழன்.
டெல்லி அணியை தடுமாற வைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது. ஐபிஎல் 2023 க்கான 34 லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிய
டெல்லி அணியை தடுமாற வைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது. ஐபிஎல் 2023 க்கான 34 லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாதும் மோதின. புள்ளி பட்டியலில் இவ்விரு அணிகளும் கடைசி இடத்திலே இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் இருந்தன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அணியின் தொடக்க ஆட்டகாரர் பிலிப் சால்ட் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார்.நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்ச்சி செய்த நிலையில், அவருடன் மார்ஷும் இணைந்தார். மார்ஷ் 25 ரன்களில் நடராஜனிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இவருடன் வார்னரும் வெளியேறி அணியின் நம்பிக்கையும் குறைந்தது. அதன் பின் வந்த சப்ராஸ் கான் மற்றும் ஹக்கீம் கானும் வாஷிங்க்டன் சுழலில் சிக்கி ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.அதன் பின் வந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்து பொறுமையாக அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டே இருந்தார்.
14ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுந்திருந்தது.தேவையான நேரத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தார்கள். சன்ரைசஸ் அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் அக்சர் அவுட்டாகி வெளியேற அவருடனே மனிஷ் பாண்டேவும் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் திணறியே வந்தனர். வந்த வேகத்திலே ரன் அவுட்டாகி வெளியேறினர். டெல்லி அணியால் 20 வது ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சன்ரைசஸ் அணியின் புவனேஸ்வர் குமார் தனது அற்புதமான பந்துவீச்சால் டெல்லி அணியை சுருட்டினார்.
145 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட சன்ரைசஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு நிதனமான தொடக்கத்தையே கொடுத்தனர். நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். ப்ரூக் அதிரடியாக விளையாட நினைத்து நார்க்கியாவிடம் ஸ்டெம்ப் அவுட்டாகி வெளியேறினார். மாயாங் அகர்வால் 49 ரன்களிலே அவுட்டாகி வெளியற அதன் பின்னர் திரிபாதி 15 ரன்களில் வெளியேறினார். சன்ரைசஸ் அணி கையில் இருந்த போட்டியை கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விட்டு வந்தனர். அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறி விக்கெட்டை இழந்து வெளியேற,ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
What a comeback by Washington Sundar..
— CricInformer (@CricInformer) April 24, 2023
First 89 balls – 0 wickets
Next 5 balls – 3 wicketspic.twitter.com/artbmBVv8h
இருப்பினும் இந்த போட்டியில் டெல்லி அணியை ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை விழ்த்தி டெல்லி அணியின் பேட்டிங்கை திணற வைத்த அந்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது. அவர் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் விழ்த்தி அசத்தினார்.