கிங் என்று நிருபித்த சென்னை அணி – 27 ரன்களில் டெல்லி அணியிடம் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டாஸ் வென்ற சென்னை

By ·

ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர்.இருப்பினும் டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதற்க்கு பின்னரே ருதுராஜ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேற, மொயின் அலியும் 7 ரன்களில் வெளியேறினார். டெல்லி அணியின் பௌலிங்கை சிறப்பாகவே இருந்து வந்தன. ஆட்டத்தில் டெல்லி அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

அதன் பின் அதிரடியை காட்டத் தொடங்கிய ராய்டு மற்றும் டுபே இணைந்து ரன்களை குவித்து வந்தனர். 12 பந்துகளில் 25 ரன்களை அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் 117 ரன்களை எடுத்திருந்தது. ஆரம்பம் முதலே சென்னை அணியீன் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்தனர். அதன் பிறகு தோனி களமிறங்க அணியின் ஸ்கோர் நிதானமாகவே உயர்ந்தது.தோனியும் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.   

              

 168 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலே அணியின் கேப்டன் 2 பந்துகளிலே வெளியேற, அவர் சென்ற வேகத்திலே சால்ட் அவரும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி சென்னை அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் மார்ஷ் 5 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் கூட்டணி அமைத்த ரூஸோ மற்றும் பாண்டே பொறுமையாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். மனிஷ் பாண்டே 27 ரன்களில் பத்திரனா பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் ரூஸோ 35 ரன்களில் வெளியேறினார்.

சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 140 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆகையால் 27 ரன்களில் சென்னை அணி வெற்றி பெற்றது.     

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை