போட்டிக்கு பின் தோனி செய்த நெகிழ்ச்சியான செயல் , இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்
ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முத
ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர். கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற, அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.
அதன் பின் ரஹானே மற்றும் டுபே கூட்டணி அமைத்து கொல்கத்தாவின் பந்து வீச்சளரை அனைத்து பக்ககளிலும் அடித்து வான வேடிக்கையை காட்டினார்கள். 16 பந்துகளிலே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். இந்த கட்டத்தில் துபே 20 பந்துகள் அரை சத்தம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழக்க ரஹானே தொடர்ந்து விளையாடி 29 பந்துகளில் 19 ரன்கள் விலாசினார். இதனால் 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர் சென்னை அணி.
இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒட்டுமொத்த அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறியது சிஎஸ்கே. அதன் பின் தோனி செய்த செயல் தான் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
MS Dhoni – everyone's favourite!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 23, 2023
First Mumbai groundsmen and now Kolkata groundsmen took a picture with him. pic.twitter.com/uqVgbAySpO
தோனி எப்பொழுதும் போட்டி முடிந்த பிறகு அங்கு உள்ள வீரர்களுடனும், மைதான ஊழியர்களுடனும் புகைப்படம் எடுத்து கொள்ளவதை வழக்கமாக வைத்திருப்பார். கடந்த சன்ரைசஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகும் தமிழக வீரர் நடராஜனின் குழந்தையுடன் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியும் முடிந்த பிறகு மைதானத்தில் உள்ள ஊழியர்களுடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் பரவி வருகிறது.