தோல்விக்கு இவர்கள் தான் காரணம் – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய ரோஹித் ஷர்மா.

தோல்வியை பற்றி பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,ஐபிஎல் 2023 க்கான 35 லீக் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைடன்ஸ் அணி எதிர்கொண்டது. கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி 7 வது இடத்தில் இருந்

By ·

தோல்வியை பற்றி பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,ஐபிஎல் 2023 க்கான 35 லீக் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைடன்ஸ் அணி எதிர்கொண்டது. கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி 7 வது இடத்தில் இருந்தும் குஜராத் அணி 4இடத்திலும் இருந்து வருகிறது, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருந்து வந்தன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணியன் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் சாஹா களமேரங்கினார்கள். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 207 ரன்களை குவித்தது குஜராத் டைடன்ஸ் அணி. மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே 200+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணியின் அதிகபட்சமாக கில் 56 ரன்களையும், மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 42 ரன்களையும் குவித்தனர்.    

208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் கண்ட  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே தடங்கலாக அணியின் கேப்டன் 2 ரன்களிலே வெளியேரினார். மும்பை அணி 20வது ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் குஜராத் அணி 55ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமலே கடைசி ஓவர் வரை இருந்தன. மும்பை அணியின் அதிகபட்சமாக வதேரா 40 ரன்களையும், கிரீன் 33 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 23 ரன்களையும் மட்டுமே அடித்தனர். இதனால் மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதை கூறித்து பேசிய ரோஹித் ஷர்மா,      

அது ஒரு சிறிய ஏமாற்றம், நாங்கள் ஆட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்தோம், கடைசி சில ஓவர்கள் அதிக ரன்களுக்கு சென்றது. ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு தனி தனியே பலம் உள்ளது, எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது, மேலும் அந்த இலக்கை அடைய நாங்கள் அஞ்சிகிறோம், இன்று எங்களுடைய நாள் அல்ல. கொஞ்சம் பனி இருந்தது, கொஞ்சம் கடைசி வரை பேட் செய்ய பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்பட்டார். கடந்த ஆட்டத்தில் 215 ரன்களைத் சேஸ் செய்யும் போது நாங்கள் மிகவும் நெருக்கமாக வந்தோம், ஆனால் இந்த போட்டியை நாங்கள் பேட்டிங்கில் சரியாகத் தொடங்கவில்லை, 200+ ரன்களைத் சேஸ் செய்யும் போது அது சரியான விஷயம் அல்ல. கடைசி 7 ஓவர்களில் கூட எங்களிடம் இருந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எனக்கூறினார் ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை