அன்று நடந்தது இது தான், கங்குலி – கோலி கூறித்து பேசிய ஷேன் வாட்சன்.

ஐபிஎல் 2023 உச்சத்தை எட்டியுள்ளது. இந்த லீக்கில் இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்து. ஆனால் இந்த லீக் 20வது போட்டியில் வித்தியாசமான சர்ச்சையை ஏற்படுத்தியது. 20வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப

By ·

ஐபிஎல் 2023 உச்சத்தை எட்டியுள்ளது. இந்த லீக்கில் இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்து. ஆனால் இந்த லீக் 20வது போட்டியில் வித்தியாசமான சர்ச்சையை ஏற்படுத்தியது. 20வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. இதற்க்கு பின் தான் கோலி மற்றும் கங்குலி பற்றிய செய்தி தீயாய் பரவியது.

வெற்றிக்குப் பிறகு, அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும்போது, ​​​​இந்த நேரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி, இந்த இரண்டு வீரர்களும் ஒருவரையொருவர் புறக்கணித்து கைகுலுக்கமல் சென்றனர். இந்த வீடியோவானது  சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் தற்போது டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், வெற்றிக்கு பின் பெங்களூரு மற்றும் டெல்லி அணியின் வீரர்கள் கைகுலுக்கி கொண்டிருந்த போது, ​​டெல்லி கேபிடல்ஸ் இயக்குநரான சவுரவ் கங்குலி, பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்த போது, ​​இவை இரண்டும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல் சென்றனர். அதே நேரத்தில் விராட் கோலியும் இந்த போட்டியில் மிகவும் கோபமாகவே காணப்பட்டார். கோலி பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கூட, கங்குலியை கோபமாகவேப் பார்த்தார். அந்த செயலும் இணையத்தில் பரவியது.

அதே நேரத்தில், இப்போது டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் இதை பற்றி வெளிப்படுத்தினார், அவர் கூறியது “அந்த போட்டியில் விராட் மிகவும் கோபமாக இருந்தார் என்பது தெளிவாகிறது. இதை எதிரணி தெரிந்து கொள்வதும் மிக அவசியம்”. “விராட், இப்படி கோபமாக இருக்கும் போது, ​​மேட்ச்சில் சிறந்ததையே கொடுதுள்ளார்” எனவும் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இதன் பிறகு இருவரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தி கொண்டனர். இந்த செய்தி சமூக வலை தளங்களில் தீயாய் பரவியது.   

விராட் கோலிக்கும் சவுரவ் கங்குலிக்கும் இடையே பிரட்சனை என்று  அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் பதவி தொடர்பாக இருவருக்கும் இடையே பிரட்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டு வந்தன. அதன் பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை