“இந்த இரவு எங்கள் உடையது இல்லை, அவர்கள் உடையது”, இறுதிப்போட்டியின் தோல்வி பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா.
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை க
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி கோப்பையை கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். குஜராத் அணியின் அதிக பட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு அதிக பட்சமாக சாஹா 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்களிலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களை குவித்தனர்.
சென்னை அணியின் பௌலிங்கை பார்த்தல் மிகவும் மோசமாகவே இருந்து வந்தது. இறுதிப் போட்டியில் வரலாறு காணாத ரன்களை வாரி வழங்கியது. தீக்ஷனா 4 ஓவர்களை வீசி 36 ரன்களை வழங்கினார். தீபக் சாஹர் மற்றும் ஜடேஜா தலா 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை வீழ்த்தி 38 ரன்களை வழங்கினார்கள். பத்திரான 4 ஓவர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தி 44ரன்களையும், தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கினார்.
215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. மழையின் காரணமாக நிருத்தி வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 26 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.
தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் ஜடேஜாவின் அதிரடியால் இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 5 வது மூறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.
நாங்கள் மிகுந்த மனதுடன் விளையாடுகிறோம், நாங்கள் தொடர்ந்து போராடிய விதத்தில் பெருமைப்படுகிறோம். எங்களிடம் ஒரு குறிக்கோள் உள்ளது – நாங்கள் ஒன்றாக வெல்வோம், ஒன்றாக தோற்கிறோம். நான் காரணம் சொல்லப் போவதில்லை, சென்னை அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் நன்றாக பேட் செய்தோம், சாய் சுதர்சன் சிறப்பாக செயல் பட்டார், இந்த அளவில் சிறப்பாக விளையாடுவது எளிதல்ல. நாங்கள் இளைஞர்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து சிறந்ததைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்.
எம்.எஸ். தோனி குறித்து பேசுகையில், நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், விதி இதை எழுதியது. நான் தோற்க வேண்டும் என்றால், நான் அவனிடம் தோற்றுவிடுவேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும், எனக்கு தெரிந்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். கடவுள் கருணை காட்டினார், கடவுள் என்னிடமும் கருணை காட்டியுள்ளார், ஆனால் இன்று அவருடைய இரவு. என்றும் குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா கூறினார்.