சிக்ஸர்களை பறக்கவிட்ட விஜய் ஷங்கர் – சொந்த மைதானத்தில் குஜராத்திடம் தோல்வியை தழுவிய கொல்கத்தா.
இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி தாமதமாகவே தொடங்கின. அதன் பிறகு டாஸ் வென்ற குஜரா
இந்தியன் பிரீமியர் லீக்கில் 39 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி தாமதமாகவே தொடங்கின. அதன் பிறகு டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணி புள்ளி பட்டியலில் 3 வது இடத்தலும் கொல்கத்தா அணி 7 வது இடத்திலும் இருந்து வந்தன. கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் அதிரடியாகவே ஆரம்பிக்க,
இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் வெளியேறி மீண்டும் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார். அதன் பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்தூல் தாக்கூர் பேட்டிங் செய்ய வந்தார். வந்த வேக்கதிலே அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு புறம் குர்பாஸ் அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதே நிலையில் அவருடைய அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். மற்றொரு புறம் வந்த வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலே வெளியேற, அணியின் கேப்டன் ராணாவும் 4 ரன்களில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தார். குர்பாஸ்க்கு மற்றொரு பக்கம் யாரும் ஜோடி இணைந்து விளையாடிய தவறியதால், அதன் பின் கொல்கத்தா அணி தடுமாற்றைதை சந்தித்து வந்தது.
இருப்பினும் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த ரிங்கு சிங் 19 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த தனது அதிரடியான பாணியில் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 179 ரன்களை குவித்தனர்.
180 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரரான சாஹா 10 ரன்கள் எடுத்த நிலையில் ரசலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு பக்கம் நின்ற கில் அதிரடியாகவே தனது ஆட்டத்தை தொடங்கினார். அதன் பின் வந்த அணியின் கேப்டன் கடைசி வரை இருப்பார் என எதிர் பார்த்தன, அவரும் 26 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினார். அதிரடியாக விளையாடிய கில் அரை சதத்தை பூர்த்தி செய்வர் என எதிர் பார்த்த நிலையில் 49 ரன்களில் சுனில் நரைன் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறியே வந்தனர். விஜய் ஷங்கர் மற்றும் மில்லர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். அதன் பின் அதிரடியை காட்டிய விஜய் ஷங்கர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். 17.5 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.