போட்டியை தோற்றாலும் யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய விராட் கோலி.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைப் பருவ பயிற்சியாளர் முன்னிலையில் இது வரை ஐபிஎல்லில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் விராட் கோலி. ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியு

By ·

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைப் பருவ பயிற்சியாளர் முன்னிலையில் இது வரை ஐபிஎல்லில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார் விராட் கோலி. ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின.டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன.

பெங்களூரு அணி லக்னோஅணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது, இருப்பினும் இப்போட்டியை வென்றால் தான் புள்ளி பட்டியலில் முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே கொடுத்தனர்.

7 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. அதன் பின்பு தான் பெங்களூரு அணிக்கு சோதனையாக கேப்டன் டுப்ளசிஸ் 45 ரன்களில் வெளியேற, அதன் பின்னரே மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அணிக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் விளையாடி வந்த விராட் கோலி தன்னுடயை அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் தான் விராட் கோலி ஐபிஎல்லில் தன்னுடைய 7000 ரன்களை பூர்த்தி செய்தார்.

முகேஷ் குமார் வீசிய பந்தில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு பக்கம் அற்புதமாக விளையாடிய லோம்ரோர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வர அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்தி வர 11 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது. இருப்பினும் டெல்லி அணி இப்போட்டியை கைப்பற்றி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரலாறு படைத்த விராட் கோலி

அதாவது இவர் ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பொறுமையோடு இப்போது 7000 ரன்களை கடந்தார் என்ற பெருமையும் சேர்ந்து கொண்டது. இவர் 15 வருடங்களாக பெங்களூரு அணியில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்,  2008 ஆம் ஆண்டு முதல் இவர் பெங்களூரு அணிக்காக தனது சிறப்பை கொடுத்து வருகிறார். கடந்த வருடம் விராட் கோலி தனது ஆட்டத்தை சரியாக விளையாட வில்லை என்றும் நிறைய விமர்சங்கள் வந்தன, அதை உடைக்கும் வகையில் இந்த சாதனையை அடைந்தார் விராட் கோலி.        

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை