இன்று நடக்கவிருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் – கணிப்பு இதோ!
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. எம்.எஸ். தோனி கேப்டனாக தனது ஐந்தாவது பட்டத்தை வென்று இறுதியில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்ய முடியும் அல்லது குஜராத் அணி வென்றால் இவ்விரு அணிகளை தவிர்த்து மூன்றவது பெரிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் உருவெடுக்கும்.
சென்னையை பொறுத்தவரை டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் குஜராத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அவர்கள் இறுதியில் குவாலிஃபையர் 1 இல் குஜராத் அணியியை சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி பெற்றனர் . அதற்கு மேல், தோனியிடம் மிகவும் தேவையான அனுபவம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிக முறை இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதி வரை இதய துடிப்பை அதிக படுத்தும் போட்டியாகவே இருக்கும்.
குவாலிஃபையர் 2 இல், குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வெற்றி பெற செய்தார். அந்த போட்டியின் மூலம் 23 வயதான அவர் தனது கடைசி நான்கு போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை அடிக்க முடிந்தது. சாய் சுதர்சனும் சிறந்த ஃபார்மில் காணப்பட்டபோது, பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்,
அதே நேரத்தில் மோஹித் ஷர்மா மீண்டும் அற்புதமான ஃபார்மில் இருந்தார், இந்த சீசனுக்கான தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். குஜராத் அணியின் பௌலர்கள் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருந்து வருகின்றனர்.
இன்றய போட்டியில் விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் இதோ :
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
குஜராத் டைட்டன்ஸ்
விருத்திமான் சாஹா , ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா , டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி
நரேந்திர மோடி மைதானம்,
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்பு பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்த உதவும். முதலில் பந்துவீசுவது சிறந்ததாக இருக்கும், மேலும் 180 ரன்களுக்கு மேல் உள்ள அனைத்தும் இந்த மேற்பரப்பில் நல்ல டார்கெட் இருக்கும்.
வெற்றி கணிப்பு
இதுவரை சென்னை அணி குஜராத் அணியை 4 முறை எதிர்கொண்டுள்ளது. அதில் 3 முறை தோல்வியையும் 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இன்று நடக்கவிருக்கும் போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இது குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆகையால் குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறப்படுகிறது.