ஐபிஎல் போல் நடக்கும் சவுதி அரேபிய லீகில், இந்திய வீரர்களை அனுமதிக்குமா பிசிசிஐ?

உலகின் சிறந்த தொடர்களில் ஒன்று இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். 2023 க்கான ஐபிஎல் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதே போல் சவுதி அரேபிய லீகை நடத்த உள்ளது.இந்த லீக் போட்டிகளில் அனுமதிக்குமா இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் ? சவுதி அரேபிய லீக் உலகின் பணக்கார வ

By ·

உலகின் சிறந்த தொடர்களில் ஒன்று இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். 2023 க்கான ஐபிஎல் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதே போல் சவுதி  அரேபிய லீகை நடத்த உள்ளது.இந்த லீக் போட்டிகளில் அனுமதிக்குமா இந்தியன் கிரிக்கெட் கவுன்சில் ?

சவுதி அரேபிய லீக்

உலகின் பணக்கார வரிசையில் இருக்கும் சவுதி அரேபிய தற்போது சுற்றுல்லா துறைகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் பிரம்மாண்ட முறையில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. ஐபிஎல் சீசனில் முக்கிய ஸ்பான்செராக சவுதி அரேபியாவின் சுற்றுல்லா துறை இருக்கிறது. சவுதி தனது நாட்டின் சுற்றுல்லா துறையை மேம்படுத்தும் வகையில் தற்போது அந்த நாட்டிலே லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.சவுதி கால்பந்து போட்டிகள் மற்றும் கார் பந்தட்டங்களில் முக்கியதுவம் கொடுத்து வந்தன. கால்பந்தட்டதின் புகழ் பெற்ற வீரர் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் தான் புதிய முயற்சியாக கிரிக்கெட் தொடரை நடத்த BBCI-யின் உதவியை நாடியுள்ளது.

தற்போது BBCI-யிடம்  ஐபிஎல் போலவே மினி ஐபிஎல்லை நடத்த வேண்டும் என முயற்சித்து வருகிறது,ஆனால் அப்போட்டிகளை அரேபியாவில் நடத்தும் எண்ணம் இல்லை. அதனால் அரேபிய அரசு சொந்தமாக லீக் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.

அனுமதிக்குமா BCCI ?

-யை  பொறுத்தவரை இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க்கும் வீரர்கள் மற்ற நாடுகளில் நடத்தும் லீக் போட்டிகளில் அந்த வீரர்கள் பங்கேற்க கூடாது என ஒரு வரைமுறையை வைத்துள்ளது.அதன் படி மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளான BBL,SA20 போன்று நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

அனால் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிய வீரர்கள் அது போன்ற தொடர்களில் பங்கேற்கலாம். இப்போது அரேபியாவில் நடைபெறும் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்குமா?என்ற கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது இதை பற்றி கூறிய “BCCI அதிகாரி ஒருவர் கூறுகையில் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் விரும்பினால் அரேபியாவில் அணிகளை வாங்க விரும்பினால் அதை தடுக்க BCCI-யால் தடுக்க முடியாது என்றும், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை