தவறுகளை சரி செய்து மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறுமா சென்னை அணி? வெற்றி யாருக்கு – கணிப்பு இதோ.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திலும் பஞ்சாப் அணி 6 இடத்தில

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 41 வது ஆட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திலும் பஞ்சாப் அணி 6 இடத்திலும் இருந்து வருகிறது. இவ்விரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது. ஆகையால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. சென்னை அணி இப்போட்டியில் வென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி        

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியின் தொடக்க அட்டகாரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தையே கொடுத்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் டுபே மற்றும் ரஹானே அணிக்கு நல்ல ஆட்டத்தை தந்து அணியின் ஸ்கோரை வருகின்றனர். ஆனால் பௌலிங்கை பொறுத்த வரை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் அணியில் இல்லை.

தீபக் சாஹர் காயம் காரணமாக சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். பௌலிங்கில் பௌலர்கள் எதிர் அணிக்கு ரன்களை வாரிவழங்கி வருகின்றனர். அதனை சென்னை அணி கண்டிப்பாக சரி செய்ய வேண்டும். இப்போது வரை சென்னை அணி சிறப்பான செயல்பட்டை தந்து வருகின்றது.

பஞ்சாப் கிங்ஸ்            

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த வருடமும் சுமாராக தான் இருந்து வருகிறது. அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல் பட்டு வருகிறார். இவர் சில போட்டிகளில் காயம் காரணமாக விலகிய நிலையில் சாம் கரண் கேப்டன்சி செய்து வருகிறார். பேட்டிங்கை பொறுத்தவரை சிறப்பாகவே இருந்து வருகிறது. அணியின் பினிஷராக தமிழகத்தின் ஷாருக்கான் இருந்து வருகிறார். கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் மோசமான பௌலிங்கின் காரணமாக லக்னோ அணி 20 வது ஓவர்களில் 257 ரன்களை குவித்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெற்றி கணிப்பு              

இரு அணிகளுக்கும் பௌலிங் சுமாராகவே இருந்து வருகிறது. ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை சொந்த மைதானம் என்ற அட்வான்டேஜ் காரணமாக சென்னை அணியின் பௌலிங் பொறுத்தவரை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. ஆகையால் சென்னை அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.     

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை