சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுமா டெல்லி அணி? கணிப்பு இதோ.
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டெல்லி அணிக
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 2 இடத்திலும் டெல்லி அணி கடைசி இடத்திலும் இருந்து வருகிறது. டெல்லி அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டி, டெல்லி அணி தோற்றால் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன தான் 2ஆம் இடத்தில் இருந்து வந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆப் ரேஸில் தொடர்ந்து நிற்க முடியும். இது வரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் மழையின் காரணமாக போட்டி தடை பெற்று 1 புள்ளி ம.ட்டுமே கிடைத்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தன.
சென்னை அணியை பொறுத்த வரை பௌலிங் சற்று மோசமான நிலையில் இருந்து வந்தாலும் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட்டு மும்பை அணியின் பேட்டிங்கை திணற வைத்து வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் 2 ஆம் இடத்தை தக்க வைத்து கொள்ளும். இருப்பினும் சென்னை அணி இந்த போட்டியை
டெல்லி கேபிடல்ஸ் அணி
டெல்லி அணிக்கு இந்த வருடம் மோசமானதாகவே இருந்து வந்தன, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினால் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். இது வரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றியை கண்டுள்ளது. இனி வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
டெல்லி அணி தொடர்ந்து இரு போட்டிகளில் வென்றுள்ளது.பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல் பட்டு 182 என்ற இலக்கை 16.4 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியை கூட விளையாடியது இல்லை, இன்று தான் மோதுள்ளது. இனி வரும் போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டி இருக்கிறது.
வெற்றி கணிப்பு
சென்னை மற்றும் டெல்லி அணிகள் கடைசியாக 6 போட்டிகளில் சென்னை மைதானத்தில் சென்னை அணியே அனைத்து முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்று நடக்கவிருக்கும் போட்டி அதை மாற்றுமா? அல்லது சென்னை அணி அதை தக்க வைத்து கொள்ளுமா? சென்னை அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.