இது ஒரு சாதாரணமான கேப்டன்சி தான். அணி வீரர்களே நல்ல SR விளையாடுறாங்க ஆனால் கேப்டனே இப்படி விளையாடலாமா?? – இர்பான் பதான் காட்டம்!

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சாதாரணமானது என்று சொல்லலாம் என இர்பான் பதான் விமர்சனம் செய்து இருந்தார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எட்டாவது போட்ட

By ·

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சாதாரணமானது என்று சொல்லலாம் என இர்பான் பதான் விமர்சனம் செய்து இருந்தார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே சோதனையாக முடிவு வரை இருந்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது. இது ஐபிஎல் வரலாறு மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலில் மயங்க அகர்வால் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் அடித்து இருந்தார்.

மும்பை அணிக்கு SRH அணி 278 ரன்களை இலக்காக் கொண்டுள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டுமானால் மிகவும் மோசமானதாக இருந்தது. இதில் அறிமுக வீரர் மபாகா நான்கு ஓவர்களில் 66 ரன்களை அவர் விட்டுகொடுத்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணியும் அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர். இருப்பினும் மும்பை அணியால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. எனவே மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 64 ரன்களை அடித்து இருந்தார். இதில் இரு அணிகளும் சேர்த்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்து இருந்தது.

இதில் மற்ற மும்பை அணியின் வீரர்கள் வந்து தங்களது அதிரடி பேட்டிங்கை காட்டி இருந்தார். ஆனாலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 120 SR-ல் தான் விளையாடி இருந்தார். அவர் 20 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அதில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தார். இது குறித்து இர்பான் பதான் கூறுகையில், அணியில் மற்ற பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, கேப்டன் மட்டும் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவது நியாயமில்லை

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சாதாரணமானது என்று சொல்லலாம். ஹைதராபாத் அணி மும்பை அணியை அப்படி அடித்து கொண்டு இருக்கும் போது பும்ராவுக்கு பந்து வீச கொடுத்து இருக்க வேண்டும் இது மிகவும் சுமாரான கேப்டன்சி என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை