உழைப்பு அவருக்கு பெயர் உங்களுக்கா? இந்திய வீரரை மறைமுகமாக தாக்கிய இர்பான் பதான்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பபணத்தில் ஏற்கனவே முதல் 2 டி20 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி 3வது போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பபணத்தில் ஏற்கனவே முதல் 2 டி20 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி 3வது போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். ஏனென்றால் விக்கெட்டுகள் விழுந்த போது வந்த இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மேலும் கடந்த 2 இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய நிலையில் திலக் வர்மா மட்டுமே அற்புதமாக விளையாடினார். சொல்லப்போனால் முதல் போட்டியில் 39 ரன்களும் இரண்டாவது போட்டியில் 51 ரன்களையும் எடுத்து இந்தியா அணிக்கு மோசமான தோல்வியை சந்திக்காமல் இருக்க போராடினர். அதே போலத்தான் 3வது போட்டியிலும் திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்களை விளாசியிருந்தார்.

ஆனால் அவர் அரை சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் கூட அடிக்க முடியவில்லை. அதாவது 18 வது ஓவரில் 5வது பந்தில் சிங்கிள் எடுத்தால் இந்தியாவின் ஸ்கோர் 158/3 என்ற நிலைமைக்கு வரும் என்பதால் கடைசிப் பந்தில் சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்து திலக் வர்மா அரை சதத்தையும் விளாசுவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த அந்த பந்தில் ஹர்திக் பாண்டியா 5வது சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கடந்த 2 போட்டிகளில் இரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி விட்டு தற்போது ஒரு இளம் வீரர் போராடி அரை சதம் அடிக்கும் நேரத்தில் இப்படி செய்தது நியாயமான என்று ஹர்திக் பாண்டியவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் இந்த நிலையில் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அந்த விடியோ பதிவில் “நீ கடைசி வரை நின்று போட்டியை ஃபினிஷிங் செய்ய வேண்டும். எத்தனை பந்துகளை எதிர்கொண்டாய் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியில் திலக் வர்மாவிடம் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது.

இதிலிருந்து தெரிகிறது திலக் வர்மாவிடம் பினிஷ் செய்ய சொல்கிறார் என்று. இதனை நம்பிக்கொண்டிருந்த திலக் வர்மாவுக்கு அதிற்சி கொடுக்கும் வகையில் 2 ரன் தேவைப்படும் நேரார்த்தில் சிக்ஸர் அடித்து ஹர்திக் பாண்டியாவே பினிசிங் செய்தார். இதனால் இளம் வீரரரை நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடர் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தது திலக் வர்மா ஆனால் அவரை ஃபினிஷிங் செய்ய விடாமல் பேர் வாங்கிக் கொண்டு சென்றது ஹர்திக் பாண்டியா என்ற வகையில் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பெயர் குறிப்பிடாமல் தம்முடைய ட்விட்டரில் இந்தியில் மறைமுகமாக தாக்கியுள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நீங்கள் கடினமான வேலைகளை செய்யுங்கள். நான் எளிதான வேலையை செய்கிறேன். இதை நான் ஏற்கனவே கேள்வி பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஹர்திக் பாண்டியாவை தான் குறிப்பிடுவது நன்றாக தெரிவதாக பதிலளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை