விராட் கோலியின் குணங்களை நான் சுப்மன் கில்லிடம் பார்க்கிறேன் – இர்பான் பதான் பாராட்டு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. பஞ்சாப் அணி இதற்க்கு முன் நடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் மற்றொரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணி இது வரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி இருந்தது
இந்த இரு அணிகளும் இன்று போட்டியில் பலப்பரீட்சை செய்வது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் பஞ்சாப் அணியின் அணியின் கேப்டன் ஷிகர் தவன். அது முதலில் குஜராத் அணிக்கு தான் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் குஜராத் அணிக்காக ரன்களை அடித்து விளாசி இருந்தார். அவர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பின் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தால் அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். இறுதியில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்து இருந்தது.
குஜராத் அணியில் அதிகப்பட்சமாக அணியும் கேப்டன் ஷுப்மான் கில் 48 பந்துகள் 89 ரன்களை எடுத்து விளாசி இருந்தார். அதில் 6 பவுண்டர்களும் 4 சிக்சர்களும் அடங்கும் அதன் பின்பு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் பத்தொன்பது பண்டிகளில் 33 ரன்களை அவர் அடித்து இருந்தார்ல. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சார்பில் சற்று சுமாராக இருந்தது. அதில் ராபடா இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்ப்ரீத் மற்றும் ஹர்ஷால் படேல் தலா ஒரு விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி இருந்தனர்
அதன் பின் 200 இலக்கை கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருக்க கேப்டன் ஷிகர் தவன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீர்களும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்ப ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா இணைந்து அணியின் வெற்றிக்கு அருகில் வரை கொண்டு சென்றன. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இருந்த போதிலும் அற்புதமாக விளையாடிய சுப்மன் கில்லிற்கு விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சுப்மன் கில் ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்பான் பதன் கூறுகையில் :டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் பல குணங்களை நான் சுப்மன் கில்லிடம் நான் பார்க்கிறேன். டி20 கிரிக்கெட்டில் விராட் எப்படி விளையாடுகிறார்? அவர் கட்டுப்பாட்டுடன் விளையாட முயற்சிக்கிறார், இருந்த போதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் நன்றாகவே உள்ளது. அதனால் விராட் கோலி பாணியில் சுப்மன் கில்லும் பேட்டிங் செய்ய முயற்சிக்கிறார். . அவர் நிச்சயமாக இளமையாக இருக்கிறார், ஆனால் நாங்கள் கட்டுப்பாட்டையும் சரிவர கிரிக்கெட்டையும் பார்க்க வேண்டும். அப்படி இருந்து ஸ்ட்ரைக் 200 க்கு அருகில் சென்றால் அது பாராட்டுக்குரியது
அவரிடம் இருந்து நாங்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பார்க்கிறோம், ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது விதிவிலக்கானது. உடற்தகுதி ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒரு ஷாட்டை ஆடியவுடன் இரண்டாவது ரன்னுக்கு தயாராகிவிடுவார். நான் பேட்டிங் பற்றி பேசினேன், ஆனால் விக்கெட்டுகள் மற்றும் முயற்சிகளுக்கு இடையே ஓடுவதில் கூட விராட் கோலியை பாராட்டுவதற்கு உரியவர். அவரை கொஞ்சம் சுப்மன் கில் பின்தொடர வேண்டும் என்றார் இர்பான் பதான்.