ஹர்திக் பாண்டியாவை கேப்டனாவே ஏத்துக்கல.. மும்பையின் கதை முடிந்தது – இர்பான் பதான் விமர்சனம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பர

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அது படி அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக அமைந்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தனர்.தொடக்க வீரர்கள் வந்த வேகத்திலேயே மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டு இருந்து வெளியேறினார். ஆனால் மிடில் ஆர்டரில் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே இணைந்து அணிக்கு ஒரு நல்ல ரங்களை சேர்த்துக் கொண்டு இருந்தனர் 20 ஓவர்கள் முடிவில் 19.5 அவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 169 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.

170ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனியாக போராடி 56 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அதன் பின் இருந்த வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை எனவே மும்பை அணி 18.5 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணி கிட்ட தட்ட வெளியேறியது என்று சொல்லலாம்

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸின் கதை ஐபிஎல் 2024 இல் முடிந்தது. அவர்கள் காகிதத்தில் மிகச் சிறந்த அணியாக இருந்தனர், ஆனால் அவர்கள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் முற்றிலும் சரியானவை. இன்று KKR 57/5 என்ற நிலையில் இருந்தபோது நீங்கள் உங்களின் 6வது பந்துவீச்சாளரைப் பந்துவீசிவிட்டீர்கள்.

மேலும் மனீஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் இடையே கொல்கத்தா அணிக்கு தேவையான ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. அந்த முக்கியமான 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொல்கத்தா அணியை 170 க்கு கொண்டு சென்றது, அவர்கள் 150 ரன்களை மட்டுமே எடுத்திருக்க வேண்டும். அதுதான் போட்டியின் திருப்பு முனையாக மாறியது.

View this post on Instagram

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

கிரிக்கெட் என்பது கேப்டனும் அணியின் நிர்வாகமும் இணைந்து விளையாடும் ஒரு விளையாட்டாகும். தற்போது MI ஒரு அணியாக விளையாடவில்லை, அதுதான் MI-க்கு இந்த சீசனில் மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளது. வீரர்கள் தங்கள் கேப்டனை ஏற்றுக்கொள்வது முக்கியம். அது இந்த சீசனில் மும்பை அணிக்கு ஏற்படவில்லை என்று நான் நினைக்கிறேன் என்றார் இர்பான் பதான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை